பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 35 மர்மம் அல்ல; மாயாஜாலம்! முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்ததுகூட ஒரு மர்மம் அல்ல! அதைவிட பெரிய ஒரு மாயாஜாலம் என்ன தெரியுமா? மறைக்கப்பட்ட அந்த சம்பவம் பற்றிப்பட்டாபி குறிப்பிடுவது என்னவென்றால், 'சென்னை மாகாண ஜன சபையாலும் டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையாரின் தீசாபிகல் சொசைட்டி என்ற சங்கத்தாலும் 17பேர்களைக் கொண்டு நடத்தப்பட்டக் கூட்டம் அது' என்றார்: டாக்டர் பட்டாபியை - ம.பொ.சி. மறுக்கிறார்! டாக்டர் பட்டாபி சீத்தாராமையா கூறும் வரலாற்றுண்மை யற்ற கருத்தைச் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் மறுக்கிறார்? எப்படி? 1884-ல் அடையாறிலுள்ள பிரமஞான சங்கத்திலே சேர்ந்தவர்கள் ஆண்டு மாநாடுநடைபெற்றது. 17 பேர் திவான் பகதூர் வீட்டில் தனியாகக் கூடி, அனைந்திந்தியாவுக்குமாக ஒரு தேசிய அமைப்பு நிறுவவும், அதற்கு மாநிலந்தோறும் கிளைகள் அமைக்கவும் திட்டமிட்டனர்” என்கிறார்சிலம்புச்செல்வர், தனது “விடுதலைப் போரில் தமிழகம்' என்ற முதல் தொகுதி நூலில். சிலம் புச் செல்வர் எந்த வரலாற்று ஆதாரத்தை வைத்து மறுக்கிறார் என்று வரலாற்றுப் பிஞ்சுகள் கேட்கக்கூடும் அல்லவா? வங்காள வரலாற்றாசிரியர் திரு. ஈஸ்வரமித்தர் தொகுத்துள்ள 'காங்கிரஸ் பல்பொருள்களஞ்சியம் (சைக்ளோபீடியா, பக்கம் 7) என்ற நூலாதாரத்தை ஏற்று, எழுதியுள்ள மேற்கண்ட கருத்து, பட்டாபிக்கு மறுப்பாக அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது. ஓரணியின் தொண்டு மறைக்கப்பட்ட மர்மம்தான் புரியவில்லை என்கிறார் டாக்டர்D.ஆஞ்சநேயலு அவர்கள்! 'அடையாறு தீசாபிகல் சொசைட்டி சார்பாக நடைபெற்ற தொடர் கூட்டங்களுக்குப் பிறகு, 1884-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த கூட்டம் அது’ என்று கூறுகிறார். நியாயங்கள் என்றும் சாவதில்லை - உண்மை, உண்மைதான்! கற்கோட்டைக்குள்ளே கல்லறை கட்டி ஒர் உண்மையை எந்தக் கடையனும் மூடி மூடிக் கனவு காண மாட்டான். உண்மை அதை உடைத்துக் கொண்டு வெளியே வரும் அல்லவா? அதற்கேற்ப, அன்று நடைபெற்ற அந்த உண்மை ஊரறியச் சாவுமணி அடித்துக்கொண்டிருக்கிறது, இதோ அந்த மணியோசை 'கிரொலிக்கின்றது பாருங்கள்!