பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தேசியத் தலைவர் காமராஜர் "-But, He mentions the fact, that it was Conceived at a Private meeting of 17 Men including members of the Madras Mahajana Sabha and of the Theosophical Society; after the Theosiphical Convention at Adyar in December - 1884. பட்டாபி சீத்தாராமையா காங்கிரஸ் கட்சியினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான வரலாற்றாசிரியர் என்று புகழப்படுபவர் நடைபெற்ற அந்த நாட்டுப் பற்றுக் கடமைக்குரிய சம்பவத்தைக் களங்கம் கற்பித்து அவர் இவ்வாறு கூறலாமா? என்பதைச் சிந்திக்க மறுத்தது ஏனோ புரியவில்லை. இதுவா வரலாற்றாசிரியருக்குரிய அழகு? மதராஸ் மகாஜன சபை - தீசாபிகல் சொசைட்டி என்ற இரு சங்கங்களும் இணைந்து, 17 பேர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தனியார்கூட்டம் என்கிறாரே...! தேசபக்திக்கான ஆண்மையாளர்கள் - அறிவாளர்கள் 17 பேர்களாயிருந்தாலென்ன? ஆயிரம் பேர்களாக இருந்தால் என்ன? அவர்கள் தனியார் கூட்டமாய் இருந்தால் என்ன? இரு சங்க இணைப்புகளாக இருந்தால் என்ன? யாராயிருந்தால் என்ன? தேசபக்தியோடு நடத்தி முடிவெடுக்கப்பட்ட அறிஞர் குழுவா, அல்லவா? இதுதான் கேள்வி. யார்.அந்த 17பேர்கள்? எப்படிப்பட்டவர்கள்? அவர்கள்பெயர்கள் என்னென்ன? என்ற விவரத்தையும் விளக்கி இருக்க வேண்டாமா? அவரது நூலில் திரு. பட்டாபி. அந்தக்கூட்டம் தீசாபிகல் சொசைட்டி தொடர்கூட்டங்களுக்குமுன்பு நடைபெற்றிருந்தால் என்ன? அல்லது பின்னால் நடந்திருந்தால் என்ன? எதற்காக நடத்தப்பட்டது என்பது கேள்வியாகாதா? அதற்கு என்ன பதில் பட்டாபியாரே! பட்டாபி எழுதியதைப் பார்த்தால், டாக்டர் D.ஆஞ்சநேயலு எழுதியதைப்போல, ஏதோஒர்.உட்சுரங்கமோ அல்லது உட்கிரகமோ இருப்பது தெரிகிறது அல்லவா? உண்மைக்குத் திரையிட்ட இந்த சம்பவத்தோடு பட்டாபி நிற்கவில்லை. "ஒட்டக்கூத்தரின்பாட்டுக்கு இரட்டைத்தாழ்ப்பாள்" என்பதற்கேற்ப, இரட்டைப் பொய்யைக் கழறி ஒர் உண்மையை உதாசீனப்படுத்த உந்துகிறது அவர் மனம் என்ன அந்தப் பொய்? இதோ அதன் எலும்பும் தோலுமான கோர உருவம்! சென்னை அடையாறு பகுதியில், 1884 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தீசாபிகல் சொசைட்டி என்ற சங்கம்நடத்திய தொடர்கூட்ட நிகழ்ச்சிகளுக்குப்பிறகு, 17 பேர்களைக் கொண்டதனியார் கூட்டம்