பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 37 நடைபெற்றது என்ற ஆழமான ஆய்வுக்கே சென்று முடிவு கட்டியுள்ளார். பட்டாபி! ஆக, இதுவரை நீங்கள் கவனமுடன் ஊன்றிப் படித்து வந்திருந்தால், முருக தனுஷ்கோடி அவர்கள் கூறிய அஞ்சா நெஞ்சக் கருத்திற்கேற்ற, அடையாளத்தை அறிந்திருக்க முடியும் அல்லவா? திவான்பகதூர் ரகுநாதராவ் என்ற ஒய்வுபெற்ற கலெக்டர் வீட்டில், உண்மையான தேசபக்தர்களைக் கொண்ட ஓர் அறிவார்ந்த அணியின் திட்டம் நடைபெற்றிருப்பது உண்மை என்று உணர்கின்றோம். அந்த அணி, காங்கிரஸ் முதல் மகா சபைக்கு முன்பு கூடிய ஒரு பூர்வாங்கக் கூட்டம் என்பதிலும் ஐயமில்லை! அதாவது ஒரு நாடகத்திற்கு முன்பு நடைபெறும் கூட்டம் என்றால், ஏதோமிகையாக எவரும் எண்ணவியலாது இல்லையா? இந்த கிராண்ட் ரிஹர்சல்தான், பூனா நகரிலே முதல் கூட்டம் என்ற நாடகமாக நடத்தப்பட இருந்தது! அங்கே பிளேக் நோயும் எலி வேட்டைப் படுகொலைகளும் குறுக்கிடவே, பம்பாயில் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரியிலே அது நடைபெற்றிருக்கிறது. இரண்டாவது tofruoti ! இதில் இன்னொரு மர்மத்யுைம் தெளிவாகக் காட்டுகிறார் திரு. டாக்டர் ஆஞ்சநேயலு அவர்கள். என்ன அது? பம்பாயிலே தேசிய காங்கிரஸ் முதல் மகாசபை நடைபெற்றது 1885-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 28-ம் நாளன்று; நண்பகல் மணி 12-15க்கு! சென்னையில், கலெக்டராக இருந்த ஆர். ரகுநாத ராவ் இல் லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை பூர்வாங்க ஆலோசனைக் கூட்டம் 1884-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26-ம் நாளன்று! குழந்தை பெறப்போகும் ஒரு பெண்ணுக்கு இடுப்பு நோயும் - இன்ன பிற குடமும் உடைந்தது பகல் 12 மணி, பிறந்தது ஒரு மணிக்குக் குழந்தை! ஆனால், பகல் 12 மணியும் பிரசவப்பிணி நேரம்தானே அதே குழந்தையைப் பெற்றிட: ஜாதகம் குறிப் போருக்கு வேண்டுமானால் ஒரு மணி முக்கியமாக இருக்கலாம்: அதற்காக, பிரசவ வேதனை நேரத்தை ஒதுக்கிவிட முடியுமா? எடுத்த எடுப்பிலேயே தாய்க்கு வேதனை தராமல் குழந்தை சுகப் பிரசவம் பிறக்க அது என்ன உலகம் போற்றும் மாமன்னன் அசோகன் பிறப்பா? பிரசவ நேரத்தில், அந்த மாமன்னன் தனது அன்னைக்குப் பிரசவதுன்பம் - சோகம் ஏதும் தராமல், சுகமாகப் பிறந்ததால்தான்