பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தேசியத் தலைவர் காமராஜர் அவனுக்கு அசோகன் என்ற பெயரை அவன் தந்தை பிந்துசாரன் சூட்டியதாக சரித்திர ஆசிரியர்கள் சாற்றுகிறார்கள் அதைப்போல் பிறந்த குழந்தையாகாங்கிரஸ் மகாசபை? எனவே, நடைபெற்ற இந்த இரண்டு கூட்டங்களின் நடவடிக்கைகளை எண்ணிப் பார்க்கும் எவரும், சென்னை மாநகர்தான் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்குக்கால்கோள்விழா நடத்திய முதல் பூர்வாங்கக் கூட்டம் அது என்று கருதமாட்டார்களா? பம்பாய் மாநகரிலே நடைபெற்ற மகாசபைக் கூட்டம் சென்னையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, இரண்டாவதாக கூட்டப்பட்ட கூட்டமல்லவா அது? இரண்டு கூட்டங்களுக்கும் இடையே உள்ள நாட்கள், குறைவல்லவா? அதுமட்டுமல்ல, பம்பாய் நகரில் முதல் மகாசபைக் கூட்டத்தைக் கூட்டிய ஹியூம் அவர்களேதான், சென்னைக் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தையும் கூட்டியுள்ளவர்; பம்பாய் மகா சபையிலே கலந்துகொண்ட அதே உறுப்பினர்களில் பலரும், சென்னை மகா சபையிலே கூடியுள்ளவர்கள்: உண்மை இவ்வாறிருக்க, சென்னை மாநகர் பூர்வாங்க காங்கிரஸ் கூட்டத்தைப் பாரபட்சமின்றிப் பலரும் பாராட்டி வரவேற்று அங்கீகரித்திருக்க வேண்டும் இல்லையே! ஏன்? பம்பாய் காங்கிரஸ் முதல் மகாசபைக்கு, சென்னை மாநகர் காங்கிரஸ் கூட்டம் ஒரு முன்யோசனைப் பூர்வாங்கக் கூட்டம் என்றாவது ஏற்றிருக்க வேண்டுமே அல்லாமல், அதை அலட்சியப்படுத்தி ஒரு மர்மமாக்கியிருக்கக் கூடாது. எது எப்படியானாலும், ஒரு வரலாற்று ஆசிரியரான பட்டாபி சீத்தாராமையா அவர்கள், சென்னையில் நடந்த அறிஞர்களின் தேசபக்தியால், உருவான துவக்க விழாக் கூட்டத்தைப் பிணமுக்காடு போட்டு மறைத்திருப்பது சரித்திர நியாயமும் அல்ல - மனசாட்சியுமாகாது - நேர்மையான எழுதுகோலின்கண்ணியமும் அல்ல! சரித்திரத்தின் ஒர் உண்மையை மனச்சான்றோடு சாற்றிய டாக்டர் D.ஆஞ்சநேயலு அவர்கள் பேனா முனைக்கு, வரலாற்றாசிரியர்கள் என்றும் வாழ்த்துப்பா பாடியபடியே இருப்பார்கள்!