பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(8) பம்பாய் நகளில் காங்கிரஸ் பேரவை! பரங்கியர் பாவங்களுக்குப் பஞ்சணை அமைக்க விரும்பாமல், அவர்கள் பாதகங்கள் வெளியேறப் பாதையமைத்திட, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை இந்தியப் பெருமக்களுக்காக இயக்கித் தந்திட, எல்லா ஏற்பாடுகளையும் திரு. ஹியூம் அவர்கள் செய்து முடித்தார். எதற்காகவும், எப்போதும், எங்கும் வழக்காடாத ஏந்தல்கள் சிலர் வெள்ளையன் கொடுங்கோல் ஆட்சியை எதிர்ப்பதற்காக மட்டுமே வருகை தந்துள்ளார்கள். தந்தக் கட்டில்களிலே படுத்துக் களைப்பாறுபவர்கள் சிலர் தங்க மஞ்சத்திலே துயிலும் தகுதி படைத்தவர்கள் ஒரிருவர்! பத்திரிகை உரிமையாளர்கள் நிருபர்களாக வந்தார்கள் படித்த பட்டதாரிகள், சட்ட நிபுணர்கள், சிறந்த வழக்கறிஞர்கள், மருத்துவ மேதைகள், தொழிலதிபர்கள், வெளிநாட்டிவே வர்த்தகம் புரிபவர்கள்; மொத்தமாக 72 பேர்கள் பம்பாய் நகரிலே கூடினார்கள். மழைக்காக உருவாகும் மின்கோடுகளாக அவர்கள் விரைந்து வந்தது ஏன்? மாடுகளைக் கட்டி மானத்தை உழச் சொன்ன அவர்கள், வெள்ளை வானத்தைப் பிளந்தெறிய மார்க்கம் கான வந்த மான மறவர்களாக வந்தார்கள். ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாயம் தேவை என்று சிந்திக்க வந்தார்கள். பசிப் பிணியால் வாடிடும் ஏழை பாழைகள் புசிக்க; பாதி வயிறு உணவாவது கிடைத்திட வழி தேடிடுவோம் என்ற வறுமை ஒழிப்பு மருத்துவர்களாக வந்தார்கள். நாள்தோறும் துன்ப, துயர சோக வாழ்க்கை வாழும் மக்களுக்குத் துயர் துடைப்பாளர்களாக வந்தார்கள். செயல்தான் கடமை பலன்தான் உரிமை கடமைகளைச் செய்யாமலே உரிமைகளைக் கேட்பது கயமை! அதனால் நமது கடமைகளை நாம் ஒழுங்காகச் செய்வோம் என்ற எண்ணத்திலே வந்தவர்கள்தான் அந்த எழுபத்திரண்டு பேர்களும்.