பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தேசியத் தலைவர் காமராஜர் தமிழ்நாட்டு மண்ணில் பூர்வாங்கமாகக் கூடிக் கலந்து யோசித்ததற்கேற்ப பூனா நகரிலே கூட முடியாமல், பம்பாய் நகருக்கு வந்தார்கள். அப்போது புனா நகரிலே எலிகளால் ஏற்பட்ட பிளேக் என்ற நோய் அந்நகரையே நாசமாக்கி, நரகமாக்கி உலுக்கிக் கொண்டிருந்தமையால் அவர்கள் பம்பாய் நகருக்கு வந்து கூடினார்கள் சென்னை மாநிலத்திலே இருந்து 24 பேர்கள் பம்பாய் மகாசபைக்குச் சென்றார்கள். இவர்களுடன் இந்து 'சுதேசமித்திரன் உரிமையாளர்களும் பிற நிருபர்களும் சென்றனர். காங்கிரஸ் மகாசபைக்கு வந்திருந்த அனைவரையும் தாதாபாய் நெளரோஜி அவர்கள் வரவேற்புரையாற்றி வருக, வருகவென வரவேற்றார். வங்கத்தைச் சேர்ந்த கிறித்தவரும் பாரிஸ்டருமான டபிள்யூ. சி. பனார்ஜி அவர்களை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ். மணி ஐயர் அவர்கள் வழி மொழிந்த பின்பு, மகாசபைத் தலைமையை பனார்ஜி அவர்கள் ஏற்று, உரையாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸ் Ꭵ Ꭵy $ ITö ☾} } } ஏன் தோற்றுவிக்கப்பட்டது? அதன் பணிகள் எவை? என்பனவற்றை தலைவர் விளக்கிப் பேசியபோது: 'நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு உழைக்க விரும்பும் எல்லோரும் நாம் நமக்குள் நெருங்கிப் பழகும் பண்பைப் பெற வேண்டும்.' 'நாம் யார்? நமது நிலை என்ன? என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு நாட்டிற்காகப் பணியாற்றிட 3 * * வேண்டும் 'நமது நாடடிற்காக நாம் ஆற்றவேண்டிய சேவைகள், கடமைகள் ஐந்து வழிகளிலே பிறக்கின்றன’’ "நாம் அனைவரும் இந்திய மக்கள்? நமக்குள்ளே மதம், ஜாதி, இனம், நிறபேதங்கள், மாகாண வெறிகள் தோன்றக் கூடாது. ' 'நமது முழு உழைப்பும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவே, என்ற எண்ணம் எழுமாறு ஒவ்வொரு துறையிலும் உழைக்க வேண்டும்.' 'எந்த பிரச்னையானாலும் சரி, அவை எப்படிப் பட்டதானாலும் சரி, நாம் - நமக்குள்ளே ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேச வேண்டும் முழு விவாதத்திற்குப் பின்பே நாம் முடிவை எடுக்க வேண்டும்.'