பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 4.4 'நம் நாட்டுச் சான்றோர்களின் கருத்துக்களைத் தேசியத் தகுதியில் பொன்னே போலப் போற்றி, அவற்றைப் பதிவு செய்திட வேண்டும். 'இன்றைய தேசியக் காங்கிரஸ் மகாசபையின் இந்தக் கூட்டத்தில், தேசியவாதிகளாகிய நாம், என்னென்ன பணிகளைச் செய்வது என்ற முடிவை நாமே நிர்ணயிக்க முனையவேண்டும்.' இவைதான், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகாலப் பொதுக் குறிக்கோள்களாக இருந்தன. பம்பாயில் திரண்ட காங்கிரஸ் பேரவையில் கூடியத் தலைவர்களது உரைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் தீட்டப்பட்டன. அந்தத் தீர்மானங்களை, தமிழக இந்து பத்திரிகை ஆசிரியராகச் சென்றிருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் முன்மொழிந்து பேசினார். ஆதிக்க வெறி பிடித்த ஆங்கிலேய ஆதிக்கத்தை அகற்றிச் சுதந்திர ஒளியை இன்று இந்தியா உலகுக்கு உணர்த்தி வருகிறது என்றால், அன்று திரு. பானர்ஜி தலைமையேற்ற அதே இந்திய தேசியப் பேரவைதான் காரணமாகும்! தொட்ட கைதுலங்கும் என்ற கை ராசியைப் போல, 1885-ஆம் ஆண்டில், அந்த மாமனிதர் பம்பாய் நகரிலே ஆரம்பித்துக் கொடுத்த காங்கிரஸ் பேரியக்கம், படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டுதோறும் ஒவ்வொரு செயல் வீரம் பெற்ற தலைவரின் கீழ்க் கூடிக்கூடி, அருகு போல் வேரூன்றி, ஆல்போல வளர்ந்து, சுதந்திர நிழலைப் பலகோடி மக்களுக்குக் கொடுத்திருக்கிறது: SSAS SSAS SSAS SSAS SSAS ৯... ষ্টীঃ প্লং * * “Ar *A° ఖేళ్ల ః క్ష