பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

) காங்கிரஸ் தலைவர்கள் காமராஜ் வரை யார் - யார்? ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் எங்கெல்லாம் எதேச்சாதிகாரம் கொடிகட்டிப் பறக்கின்றதோ அங்கெல்லாம் அநீதியும் ஆத்திரமும் ஆர்ப்பரித்தே எழும்! எந்த நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளைப் பாயாக விரித்துக் கடமையைத் தலையணையாக்கி, சோம்பலைச் சுகமாகக் கருதி, வறுமையை உறக்கமாக எண்ணிக்குறட்டை ஒலிகளின் சங்கீதத்தில் துயில் கொண்டிருக்கிறார்களோ அந்த நாட்டிலே அந்நியன் ஒருவன் அரசனாகிக் கொடுங்கோலானாக மாறமாட்டானா? அவசரச்சட்டங்களும், ஆள்துக்கிகளின் கெடுபிடிகளும், அடி, உதை, கொலைகளும், அடக்குமுறை தர்பார்களும், காராக்கிரக இருட்டறைச் சித்ரவதைகளும், ஒருநாள் அவர்களுக்கே திரும்பி எதிரொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இத்தகைய அரசியல் வன்முறைகளை எதிர்க்கும் ஆற்றல் ஒருநாள் மக்களுக்குத் தானாக வந்தே தீரும்! 'கோடிக் கணக்கான இந்திய மக்கள்; ஆட்சியை எதிர்த்து அறப்போராட்டம் புரியும் போது; தனது தேக பலத்தை எண்ணினால் அது மறப் போராட்டமாக மாறி விடும். அதனால், அறப்போராட்டத்திற்கு உண்மையை உலகுக்கு உணர்த்தும் தலைவர்கள் தேவை அகிம்சை தத்துவத்தை மக்களுக்கு அறிவுறுத்தும் எளிமையான அரசியல் தலைவர்கள் ஒரு கட்சிக்கு அவசியம். அப்போதுதான், அடிமைகளாக இருக்கின்ற மக்கள், ஆதிக்க ஆட்சியின் வலிமையை எதிர்க்கும் ஆத்மபல ஆற்றலைப் பெறுவர்கள்!" காந்தியடிகள் ஒரு மாநாட்டில் பேசும் போது குறிப்பிட்டவை இவை, இவற்றிற்கேற்ப அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபைகள் ஆண்டாண்டு தோறும் இந்தியா முழுவதுமுள்ள நகரங்களில் கூடி, மக்களுக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஊட்டின.