பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 43 அந்தந்த வருடங்களில் நடைபெற்ற அரசியல், சமுதாய, பொருளாதாரவளர்ச்சிகளுக்குக்கேற்றாற்போல அவை உழைத்தன! அதன் விவரங்கள் வருமாறு: 1885-ஆம் ஆண்டு பம்பாய் நகரில் கெளவாலியா குளம் அருகிலே உள்ள கோகுல்தாஸ் தேஜ் பால் சமஸ்கிருதக் கல்லூரியிலே முதல் காங்கிரஸ் மகா சபை கூடியது. திரு டபிள்யூ. சி. பானர்ஜி அவர்கள் அதற்குத் தலைமை வகித்தார். 1886-ஆம் ஆண்டு வங்காளத்திலே உள்ள கல்கத்தா நகரில் மகாசபை நடந்தது. திருதாதாபாய் நெளரோஜி அவர்கள்தலைமை தாங்கினார்: 1887 - ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரில் மகாசபை குழுமியது. பத்ரூதீன் தயாப்ஜி அவர்கள் தலைமை ஏற்றார். 1888-ஆம் ஆண்டு, அலகாபாத் நகரில் மகாசபை கூடியது. அதன் தலைவர் ஜார்ஜ்யூல் என்பவராவார். 1889-ஆம் ஆண்டு, பம்பாய் நகரில் நடைபெற்ற மகாசபைக்கு சர் வில்லியம் வெட்டர்பர்ன் அவர்கள் தலைமை தாங்கினார். இவர், காங்கிரஸ் மகாசபையைத் துவக்கிய ஹியூம், அவர்களின் நண்பர் ஹியூம் சரிதையை இவர் எழுதினார். 1890-ஆம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் கல்கத்தா நகரில் பெரோஷ்ஷா அவர்கள் தலைமையில் நடந்தது. 1891-ஆம் ஆண்டு, நாகபுரி நகரில் ஆந்திர மாநில தேசபக்தர் பி. அனந்தாசார்யுலு அவர்கள் தலைமையில் காங்கிரஸ் பேரவை கூடியது. 1892-ஆம் ஆண்டு; டபிள்யூ. சி. பனார்ஜி அவர்கள் தலைமையில் இரண்டாவது முறையாக அலகாபாத் நகரிலே மகாசபை இயங்கியது. 1893-ஆம் ஆண்டு, கூடிய காங்கிரஸ் சபையை, லாகூர் நகரில் இரண்டாவது தடவையாக, தாதாபாய் நெளரோஜி அவர்கள் தலைமையேற்று நடத்தினார். 1894-ஆம் ஆண்டு, தமிழர்தம் தலைநகராம் சென்னை மாநகரில் ஆல்ஃபிரட் வெப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 1895-ஆம் ஆண்டு, பூனாநகரில் சுரேந்திரநாத் பனார்ஜி அவர்கள் தலைமையேற்று மகாசபையை நடத்தினார்.