பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தேசியத் தலைவர் காமராஜர் 1896-ஆம் ஆண்டு, ஆர்.எம். சயானி என்பவர்தலைமை தாங்கி, கல்கத்தா நகரிலே காங்கிரஸ் பேரவையை நடத்தினார். 1897-ஆம் ஆண்டு, அம்ரோட்டி நகரில், சி. சங்கரன் நாயர் அவர்கள் தலைமையில் பேரவை நடைபெற்றது. இவர் சென்னை மாநிலத்தில் துவங்கப்பட்ட மெட்ராஸ் மகாஜன சபையின் செயற்குழு உறுப்பினராவார். 1898-ஆம் ஆண்டு, ஆனந்தமோகன் போஸ் அவர்கள் தலைமையில், சென்னை மாநகரில் மகாஜன சபை மாநாடு நடந்தது. 1899-ஆம் ஆண்டு, லக்நெள நகரில் நடந்த காங்கிரஸ் இயக்க மாநாட்டிற்கு ரோமேஷ் சந்திரதத் அவர்கள் தலைமை வகித்தார். 1900-ஆம் ஆண்டு லாகூர் மகாசபைக்கு என். ஜி. சந்தவர்கார் அவர்கள் தலைமையேற்றார். 1901-ஆம் ஆண்டு, தின்ஷா எதுஜிவாச்சா அவர்கள் கல்கத்தா மாநாட்டின் தலைமைப் பொறுப்பு ஏற்றார். 1902-ஆம் ஆண்டு, அகமதாபாத் நகரில் நடந்த மகா சபைக்கு சுரேந்திரநாத் பானர்ஜி அவர்கள் தலைமை வகித்தார். 1903-ஆம் ஆண்டு, சென்னை மாநகரில் கூடியது. அதற்கு இலால் மோகன கோஷ் அவர்கள் தலைவராக இருந்தார். 1904ஆம் ஆண்டு, சர் ஹென்றி காட்டன் அவர்கள், பம்பாய் நகரப் பேரவைக்கு தலைமை தாங்கினார். 1905- ஆம் ஆண்டு வாரணாசி எனப்படும் காசிமாநகர் காங்கிரஸ் மகாசபைக்கு கோபால கிருஷ்ணகோகலே அவர்கள் தலைமை ஏற்றார். இவர், மிதவாத காங்கிரஸ் அணியின் தலைவர்; தேசத் தந்தை காந்தியடிகளால் தனது அரசியல் ஆசான் என்று போற்றப்பட்டவர். 1906-ஆம் ஆண்டு, நடைபெற்றக் கல்கத்தா நகர் காங்கிரஸ் மகாசபைக்கு மூன்றாவது முறையாக, தாதாபாய் நெளரோஜி தலைமை தாங்கி நடத்தினார். 1907-ஆம் ஆண்டு, காங்கிரஸ் மகாசபை சூரத் மாநகரில் கூடியது. அதற்கு ராஷ்பிகாரி கோஷ் அவர்கள் தலைமை வகித்தார். இந்த பேரவைக் கூட்டத்தில்தான், பாலகங்காதர திலகர் தீவிரவாத நோக்குடன் காங்கிரஸ் மகாசபையை விட்டு வெளியேறினார். முதன் முதலாகக் காங்கிரசில் ஏற்பட்ட பிளவு இதுதான்.