பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 45 மகாசபைக் குத் தலைமை வகித்த கோஷ் அவர்கள், தனது உரையைப் படிக்க முடியாத அளவிற்கு, கூச்சலும் குழப்பமும்கலவரமும் உருவானது. மிதவாதக் காங்கிரஸ்காரர்கள் மட்டும் சபையில் கூடியிருந்தபோது, தலைவர் கோஷ் அவர்கள் தனது உரையின் சில முக்கிய கருத்துகளைப் படித்தார். தீவிரவாதிகள் அணிக்குத் திலகர் தலைமையேற்றார். 1908-ஆம் ஆண்டு, காங்கிரஸ் மகாசபை, சென்னை மாநகரில் கூடியது. இந்த சபைக்கு சூரத் நகர் காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமையேற்ற டாக்டர் ராஷ்பிகாரி கோஷ் அவர்களே மீண்டும் தலைமை தாங்கி நடத்தினார். 1909-ஆம் ஆண்டு, இலாகூர் மாநகரில் காங்கிரஸ் கட்சிப் பேரவை இயங்கியது. மதன்மோகன் மாளவியா அவர்கள் தலைமை வகித்தார்! அப்போதுதான் ஆங்கில ஆட்சி ஒரே மாநிலமாக இருந்த வங்காள மாநிலத்தை இரண்டாகப் பிளந்தது. ஆங்கில ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் தென் ஆப்பிரிக்கா இந்தியர்கள் உரிமைகளுக்காக வாதாடி பெற்ற வெற்றிக்கு, இந்தப் பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 1910-ஆம் ஆண்டு, அலகாபாத் மாநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரவைக்கு, இரண்டாவது முறையாக சர் வில்லியம் வெட்டர்பர்ன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த மகாசபை, காங்கிரஸ் இயக்கம் துவங்கி இருபத்தைந்து ஆண்டுகளாகி விட்ட வெள்ளி விழா மகாசபையாகும். அதனால், வெள்ளிவிழா ஆண்டு மாநாடாக இந்தப் பேரவையைக் கொண்டாடியது - சுதேசி இயக்கம் என்ற அரசியல் குறிக்கோளை இந்த மகாசபை ஏற்றது. 1911-ஆம் ஆண்டு, காங்கிரஸ் பேரியக்கம், கல்கத்தா நகரில், பண்டித பிஷன் நாராயண்தார் அவர்கள் தலைமையில் நடந்தது. காங்கிரஸ் தலைவர்கள் சட்ட சபைக்குச் சென்று பணியாற்றும் திட்டத்திற்கு சபையில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. 1912-ஆம் ஆண்டு, பங்கியூர் என்ற நகரில் ஆர். என். மதோல்கர் அவர்கள் தலைமையில் மகாசபை நடந்தது. காங்கிரஸ் பேரியக்கத்தைத் தோற்றுவித்த அரசியல் ஞானி ஆலன் அக்டேவியன் ஹியூம், இங்கிலாந்து நாட்டில் இயற்கை எய்தியதற்காக மெளனமும் அனுதாபமும் - வருத்தமும் ஆழ்ந்த இரங்கலும் இந்த சபை தெரிவித்தது. அவரை ஒரு ரிஷி என்றும் பாராட்டி விருது வழங்கியது.