பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தேசியத் தலைவர் காமராஜர் 1913-ஆம் ஆண்டு, கராச்சி மாநகரில் காங்கிரஸ் பேரியக்கம் இயங்கியபோது, நவாப் சையத் முகமது பகதூர் அவர்கள்தலைமை வகித்தார். 1914-ஆம் ஆண்டு, சென்னை மாநகரின் காங்கிரஸ் கட்சிப் பேரவை மாநாட்டிற்கு, பூபேந்திர நாத் பாசு தலைமையேற்றார். இவர், ஜாதி, மத பேதங்களை மறந்து, கட்சிப் போராட்டங்களைக் கடந்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிப் போராட வேண்டும் என்று குரல் கொடுத்தார். 1915-ஆம் ஆண்டு, பம்பாய் மாநகரில் காங்கிரஸ் பேரவை கூடியது. சர்சத்தியேந்திரபிரசன்னசின்மஹாதலைமையேற்றார். இவர், ஏற்றுமதி இறக்குமதி வரி வசூல்கள் கெடுபிடிகளை எதிர்த்தார்; சுதந்திரமாக அவை இயங்க வேண்டும் என்றார். 1916-ஆம் ஆண்டு, லக் நெள நகரில் மகா சபை நடந்தது. அம்பிகாசரண்மஜும்தார்.அவர்கள் அதற்குத் தலைமை வகித்தார். இவர், சுதேசி இயக்கத்தை ஆதரித்து முழக்கமிட்டார். 1917-ஆம் ஆண்டு, கல்கத்தா நகரில் காங்கிரஸ் பேரவை கூடியது. திருமதி, டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் இம்மாநாட்டிற்குத் தலைமைதாங்கினார். இவர் அயர்லாந்து நாட்டிலே பிறந்து, இந்திய மக்கள் சமுதாயத்திற்காகப் போராடினார். அவர், சாரணர் இயக்கத்தை இந்தியாவில் நிறுவ வேண்டுகோள் விடுத்தார். இந்த அம்மையார் சென்னை மாநகரை தம் வாழ் நகராக ஏற்று, தியாசாபிகல் சொசைட்டி என்றதோர் ஆன்மிக ஞான சபையை அடையாறு பகுதியிலே நிறுவிய ஒரு போராட்ட சிறைப் பறவை! சிறந்த தனது சீரிய சிந்தனையால் பண்டித மோதிலால் நேருவையும், ஜவஹர்லால் நேருவையும் திரு. வி.க. போன்ற மேதைகளையும் தனது இயக்கச் சிந்தனைக்கு ஈர்த்த ஓர் ஆன்மிக ஞானி. 1918-ஆம் ஆண்டு, இந்திய தலைநகர் டெல்லி மாநகரில் முதன் முதலாக காங்கிரஸ் பேரவை கூடியது. இதற்கு, மதன்மோகன் மாளவியா அவர்கள் இரண்டாம் முறையாகத் தலைமை வகித்தார்: பெண்களுக்கும் ஒட்டுரிமை வேண்டும் என்று முழக்கமிட்டார்: மருத்துவத்துறையில், ஆயுர்வேதம், யுனானி முறைகளை ஆதரிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 1919-ஆம் ஆண்டு, அமிர்தசரஸ் மாநகரில் காங்கிரஸ் மாநாடு கூடியது. பண்டித மோதிலால் நேரு இதற்குத் தலைமையேற்றார். அப்போது நடைபெற்ற ஜாலியான்வாலா பாக் படுகொலையின்