பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 4.7 காட்டுமிராண்டிப் போக்கைக் கண்டித்து, முழக்கமிட்டார்: ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட ரெளலட் என்ற கறுப்புச் சட்டத்தின் கொடுமைகளை மக்களிடையே எதிரொலித்தார். பொறுப்பானதோர் ஆட்சியை மக்களுக்காக அமைத்திட இந்தியா தகுதிபெற்றுவிட்ட நிலையை விளக்கினார் இவர். பிரதமர் நேரு அவர்களின் தந்தையார் இந்திராகாந்தி அவர்களின் தாத்தார் ராஜிவ்காந்தி அவர்களின் தாய்வழி தாத்தா ஆவார்: 1920-ஆம் ஆண்டு, இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை நாகபுரியிலே நடந்தது. இந்த பேரவைக் கூட்டத்திற்குத்தான் முதன் முதலாகத் தமிழர் ஒருவர் தலைமை வகித்தார் பெயர் சேலம் சி. விஜயராகவாச்சாரியார் ஆவார். இவருடைய தலைமைதான் காந்தியடிகளின் ஒத்துழையாமைப் போருக்குரிய பச்சைக் கொடியைக் காட்டியது. தொழிலாளர்கள்தங்கட்கெனசங்கங்களை ஆரம்பிக்க ஆதரவுதந்தது; அகிம்சைதத்துவம் இவரது தலைமைப் பேச்சில் அழகு நடையாக அருவியென தவழ்ந்து வந்தது! திலகர், தீவிரவாதத்தை ஆதரித்துக் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். பிறகு, அண்ணல் காந்தியடிகளின் ஆதரவோடு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிறகு, நாகபுரி காங்கிரஸ் மகாசபைக்கு தலைவரானார்! 1921-ஆம் ஆண்டு, அகமதாபாத் மாநகரில் காங்கிரஸ் மகாசபை நடந்தது. தேசபந்து சித்தஞ்சன் தாஸ் சிறையில் இருந்தபடியே, மகாசபையின் தலைமை பேச்சின் தன்மையைக் கண்ட காந்தியடிகள், தனது "யங் இந்தியா' என்ற பத்திரிக்கையில், சி.ஆர். தாஸ் உரை முழுவதையும் அடிக்குறிப்பிட்டு வெளியிட்டார். அவர் மாநாட்டிற்கு வர முடியாமல் போகவே, அவருக்குப் பதிலாக, தற்காலிகத் தலைவராக திரு. ஹக்கிம் ஹஜ்மல்கான் தலைமை வகித்தார். 1922-ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி மகாசபை கூடியது. தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் அவர்களையே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்தது மகாசபை இவர் தனது உரையில், காந்தியக் கொள்கைகள் மீது நம்பிக்கையற்றவராய் சவால் விட்டு அறை கூவினார் தமிழகத்தியாகி சுப்பிரமணிய சிவா, சி.ஆர். தாஸ் அவர்களைத் தர்மபுரி மாவட்டத்திலே உள்ள பாப்பாரப்பட்டி என்ற பேரூருக்கு அழைத்து வந்தார். இந்தியத் தாயைப் பாரத தேவியாக வழிபட்டு வந்த தியாகி சிவா அவர்கள், அந்த பாரததேவி திருக்கோயிலைப் பாப்பாரப் பட்டியிலே எழுப்பிட நிலம் வாங்கி அந்த ஆலயத்திற்கான அஸ்திவாரத்தை சி.ஆர். தாஸ்