பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தேசியத் தலைவர் காமராஜர் அவர்கள் கையாலே திறந்து வைத்தார் திரு சுப்பிரமணிய சிவா! சிவா ஆசை இன்றுவரை நடைபெறவில்லை! 1923-ஆம் ஆண்டு, காக்கிநாடா நகரில் காங்கிரஸ் மகா சபை மாநாடு கூடிற்று. மெளலானா மகமதலி தலைமை வகித்தார்: சி.ஆர். தாஸ் அவர்கள் சவாலை சமன்படுத்துபவரைப் போல, காந்தியடிகள் கொள்கைககள்தான், அடிமைப் பிணியிலே அவதியுறும் இந்திய மக்களுக்கான மாமருந்து என்று மறுப்புரைத்தார்: காங்கிரஸ் வரலாற்றில் அலி சகோதரர்கள் மிக முக்கியமானவர்கள்! அவர்கள் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட முஸ்லிம் சகோதரர்கள் அவர்களுள் ஒருவர் மெளலானா முகமதலி மற்றவர் மெளலானா சதக்கத் அலி! 1924-ஆம் ஆண்டு, பெல்ஹாம் நகரில் தேசியக் காங்கிரஸ் பேரவை கூடியது. மகாத்மா காந்தியடிகள் தலைமை ஏற்றார்: காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு கால வரலாற்றில் தேசத் தந்தையெனப் போற்றப்படும் அண்ணல் காந்தியடிகள், காங்கிரஸ் பேரியக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்திய முதல் மாநாடும் இதுதான், கடைசியும் இதுதான்! ஆங்கிலேயரை எதிர்த்து சத்தியாக் கிரஹம் நடத்துவது எனது பிறப்புரிமை என்றார். தீண்டாமைக்கு எதிராகப் பெரும் போரையே தொடுத்தார் அயல்நாட்டுத் துணிகளை பகிஷ்கரித்தார். காங்கிரஸ் கட்சியை விட்டு மனத்தாங்கல்களால் ஒதுங்கி இருந்த காலங்களிலும், காங்கிரசை வழிநடத்திச் சென்ற வழிகாட்டி அவர் இந்தியா விடுதலை பெற பலமுறை சிறையேகியவர்: போராட்ட வாழ்க்கை வாழ்ந்தே சுதந்திரம் பெற்ற தேசத் தந்தை அவர் 1925-ஆம் ஆண்டு,கான்பூர்காங்கிரஸ் பேரவைக்குக் கவிக்குயில் சரோஜினி நாயுடு தலைமை வகித்தார்! ஆண்டுதோறும் நடைபெறும் தேசியக் காங்கிரஸ் மகா சபையின் எல்லா நடவடிக்கைகளிலும், இந்துஸ்தானி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் அம்மையார் தலைமையேற்றப் பேரவையிலேதான் நிறைவேற்றப்பட்டது. 1926-ஆம் ஆண்டு,கெளகாத்திநகரில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிப் பேரவை நடந்தது. எஸ். சீனிவாச ஐயங்கார் என்ற தமிழர் இவர் இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்ற இரண்டாவது தமிழர். 'இந்து - முஸ்லிம் ஒற்றுமை ஓங்கிடக் குரலொலித்தார்! அரசியலில் மதத்தை இணைப்பதை அறவே வெறுத்துப் பேசினார்: