பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 49 இண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, காதித்தொழில் வளர்ச்சி போன்ற திட்டங்கள் வெற்றி பெற்றிடத் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று வாதாடினார். 1927-ஆம் ஆண்டு, சென்னை மாநகரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபைக்கு திரு. எம்.ஏ. அன்சாரி தலைமை வகித்தார். இவர், முழு விடுதலை தேவை என்றார்; அதற்கான போர்க்கொடியை இந்த மாநாட்டிலே பறக்க விட்டார், தனது உரையில். - 1928-ஆம் ஆண்டு, கல்கத்தா தேசிய மகாசபைக்கு மோதிலால் நேரு அவர்கள்தலைவரானார். சர்தார் படேல் அப்போது நடத்திய பர்தோலி விவசாயிகள் போராட்டத்தை வரவேற்று - வாழ்த்தினார்: 1929-ஆம் ஆண்டு, லாகூர் மாநகரில் திரு. பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தலைமையில் நடந்தது, இந்தியாவிற்கு முழு விடுதலைதான் தேவை; அது எமது பிறப்புரிமை என்று முழக்கமிட்டார். 1930-ஆம் ஆண்டு, வழக்கமாக நடைபெறும் இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை நடைபெறவில்லை. 1931-ஆம் ஆண்டு, திரு. சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் தலைமையேற்ற, கராச்சி நகரிலே தேசிய காங்கிரஸ் மகாசபை கூடியது. சமூகக் கலவரங்களால் பழியேற்ற மாவீரன் பகவத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கு மேடை ஏற்றப்பட்டதற்கு அனுதாப மெளனம் கடைப்பிடிக்கப்பட்டது. இரும்பு மனிதரான படேல், அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்து முழக்கமிட்டார். 1932-ஆம் ஆண்டு, திரு. மதன்மோகன் மாளவியா அவர்கள் மூன்றாம் முறையாகக் கல்கத்தா நகர் காங்கிரஸ் மகாசபைக்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது, மாளவியா அவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டு சிறையிலே இருந்தார். அதனால், அவரது துணைவியார் நெல்லி சென் குப்தாமகாசபைக்குத் தலைமை ஏற்றார்: 1933-ஆம் ஆண்டு, பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் பேரியக்கக் கூட்டத்திற்கு, திரு. டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் தலைமை வகித்தார்! அவர் காந்தியடிகள் தேசியக் காங்கிரஸ் கட்சியை விட்டு ஒய்வு பெறக்கூடாது என்று காந்தியடிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்தியா 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்பு, இவர் முதல் குடியரசுத்