பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தேசியத் தலைவர் காமராஜர் தலைவராகப் பதவியேற்றார். அல்லும் பகலும் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களில் முக்கியமானவர்களிலே ஒருவராகத் திகழ்ந்தார். 1934-ஆம் ஆண்டு லக்னோநகரில் நடந்த காங்கிரஸ் மகாசபை இரண்டாவது தடவையாக திரு பண்டித ஜவகர்லால் நேரு தலைமையில் இயங்கியது. இந்தப்பேரவையில் வழக்குரைஞர்கள் காங்கிரஸ் போராட்ட வழக்குகளுக்காக வாதாட வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 1936-ஆம் ஆண்டு, வழக்கம் போல் ஆண்டுதோறும் நடைபெறும் காங்கிரஸ் மகா சபை மாநாடு இந்த ஆண்டில் நடைபெறவில்லை. 1937-ஆம் ஆண்டு, பைல் பூர் நகரில் மகாசபை கூடியது. மூன்றாவது முறையாக திரு பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தலைராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாகும் நெருக்கடி ஆபத்து சூழ்ந்துள்ள நேரம். இந்தியா எக்காரணத்தைக் கொண்டும் அந்தப் போரில் ஆங்கிலேயருக்கு ஆதரவாகவோ உதவியாகவோ பங்கேற்கக் கூடாது. 1935-ம் ஆண்டின் சட்டத்தை ஏற்கக்கூடாது என்று பலத்த பகிரங்க எதிர்ப்பு முழக்கமிட்டார். 1938-ஆம் ஆண்டு, ஹரிபுரா என்ற அழகு நகரில் இந்திய தேசியக் காங்கிரஸ் பேரியக்கம் கூடியது. சுபாஷ் சந்திரபோஷ் அந்த மகாசபைக்குத் தலைமையேற்றார். "அவரவர்தாய் மொழிகளிலே பள்ளிகளை நடத்த வேண்டும். அரசியலமைப்புக்கு உட்பட்ட சட்ட மன்றங்கள் அமைய ஒர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்' என்று முழக்கமிட்டார். 1939-ஆம் ஆண்டு, திரிபுரா என்ற நகரில் இந்திய தேசிய மகாசபை கூடியது. இந்தப் பேரவைக்கு சுபாஷ் சந்திரபோஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அதைக் காந்தியடிகள் விரும்பவில்லை. சுபாஷ் பாபுவை எதிர்த்து டாக்டர் பட்டாபி சீத்தாராமையா நின்றார். இவருக்கு அண்ணல் காந்தி அடிகள் ஆதரவளித்தார். அப்போது சுபாஷ் பாபு கடும் நோயால் வேதனைப்பட்டார். இருந்தும் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை சுபாஷ் பாபுவையே வெற்றி பெற வைத்தது. பட்டாபி தோல்வி என் தோல்வி என்று கூறி காந்தியடிகள் ஒப்புக் கொண்டார். சுபாஷ் பாபுவிற்கு அடிகள் விரோதத்தால் போதிய செயலாற்றும் ஒத்துழைப்புப் பெற முடியாது போயிற்று. தனது தலைவர் பதவியை அவர்ராஜினாமா செய்தார். இதனால், இந்திய