பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 51 தேசியக் காங்கிரஸ் கட்சியில் மீண்டுமோர் பெரும் பிளவு ஏற்பட்டது. 1940-ஆம் ஆண்டு, ராம் கார் நகரில் காங்கிரஸ் மகாசபை நடந்தது. மெளலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் தலைவரானார். போர்க் காலத்தை முன்னிட்டு பணமோ ஆயுதமோ, ராணுவ உதவியோ காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர் ஆட்சிக்குச் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு எரிநெருப்பு முழக்கமிட்டார். There were no annual sessions of the congress during the years 1941, 42,43, 44 and 45 When the Leaders were in jail during the Quit India Movement. காந்தியடிகளின் 'வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டத்தில் தேசியத் தலைவர்களும் - தொண்டர்களும் ஈடுபட்டு, அனைவரும் காராக்கிருகத்திலே அடைபட்டு இருந்ததால், வழக்கம் போல் நடைபெறும் இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை ஆண்டு மாநாடுகள், 1941, A2, A3,44, 45 ஆம் ஆண்டுகளில் நடைபெறவில்லை. 1946-ஆம் ஆண்டு, இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை மீரட் நகரிலே மீண்டும் கூடியது. ஆசார்ய கிருபளானி அவர்கள் அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்றார். சிறைமீண்ட விடுதலை வீரர்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடு கூடினர் அந்த மாநாட்டில்! புதிய ரத்தம் பாய்ந்த தெம்புணர்ச்சியோடு அனைவரும் மாநாட்டில் பங்கேற்றார்கள். - 1947 - ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியால், அந்த ஆண்டு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெறவில்லை. 1948-ஆம் ஆண்டு, ஜெய்பூர் நகரில் திரு. டாக்டர் பட்டாபி சீத்தாராமையா அவர்கள் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெற்றது. பட்டாபி, பிரதமர் நேரு, துணைப் பிரதமர் வல்லபாய் படேல் ஆகியோர் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கிடத் தீர்மானித்தார்கள். 1949-ஆம் ஆண்டு, வழக்கம்போல,அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாடு, இந்த ஆண்டு நடைபெறவில்லை. 1950-ஆம் ஆண்டு, நாசிக் நகரில் புருஷோத்தம்தாஸ் தாண்டன் அவர்கள் தலைமையில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெற்றது.