பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தேசியத் தலைவர் காமராஜர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டமையால், அதன் அதிகாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தவும், சுயநலத்திற்காக அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யவும் காங்கிரஸ்காரர்கள் துணிந்துவிட்டார்கள் என்ற புகார்கள், கட்சியிலே ஊடுருவும் ஊதுகுழல்களாகிவிட்டன. 1951-ஆம் ஆண்டு, பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் புதுடெல்லியில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெற்றது. தேர்தல் நேரங்களில் காணப்படும் ஜனநாயக விநோதச் செயல்களைச் சாடினார் பிரதமர் நேரு எதிர்காலத் தேர்தல் நேரங்களில், காங்கிரஸ் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படாமல், காந்தியடிகள் புகழுக்கு மாசு சூழாமல் பணியாற்றிடுமாறு தலைவர் பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். (1952-ஆம் ஆண்டு , வழக்கமாக நடைபெறும் காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெறவில்லை.) 1953-ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி மாநாடு ஐதராபாத் நகரில் மீண்டும் பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் இயங்கியது. இந்தியாவின் மாநிலங்களில் மொழிப் பிரச்னை ஒரு தீராத சிக்கலாகி விட்டதை நாம் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும் என்றார். 1954-ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்திலே உள்ள கல்யாணி நகரில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி மாநாடு நடந்தது. பிரதமர் நேருவே, பிரதமராகி மூன்றாம் முறையாக மாநாட்டின் தலைவரானார்! சீனா, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு மேகங்கள் இந்தியாவைச் சூழ்ந்துள்ள நிலைகளை அவர் விளக்கினார். 1955-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டிலுள்ள ஆவடி, சத்திய மூர்த்தி நகரில் யு.என். தேபர்தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெற்றது. சமதர்ம சோசலிசப் பயணத்தை, பிரதமர் நேரு காட்டும் வழியில் பின் தொடர்ந்திட மக்கள் தயாராக வேண்டும் என்றார். ஏழை பணக்காரர் என்ற ஏற்றத் தாழ்வற்ற ஜனநாயக சோசலிசத்திற்கு நாம் பாடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 1956,1957,1958, 1959 - ஆம் ஆண்டு மாநாடுகள், அமிர்த சரஸ், இந்தூர், கெளகத்தி, நாகபுரி போன்ற நகர்களிலே நடைபெற்றன. இவற்றினால் சிறப்பான இலட்சியங்கள் ஏதுமில்லை. மாறாக ஒவ்வொரு மாநிலக் காங்கிரஸ் கட்சிகளிலும் பதவி மோதல்கள்,