பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 53 அதிகாரத் துஷ்பிரயோகங்கள், லஞ்ச லாவண்யக் கலவரங்கள், ஊழல் குழப்பங்கள், அதனால் சுட்டுக் கொல்லப்பட்ட கெய்ரோன், கலிங்கா ஏர்லைன்ஸ் போன்ற பற்பல சம்பவங்களால், காங்கிரஸ் கட்சியில் கலகலப்பு உருவாகி வளர்ந்தது. இவை பிரதமர் நேரு அவர்களுக்குத் தீராத தலைவலிகளாகி விட்டன. ஆட்சி, கட்சி பிரச்னைகள் இவற்றால் திணறும் நிலை அவருக்கு ஏற்பட்டதால் சோர்ந்தே காணப்பட்டார். 1960-ஆம் ஆண்டு, பெங்களுர் மாநகரில் திரு.என். சஞ்சீவி ரெட்டி அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாடு நடந்தது. 'நாம், நமது ஆன்மிக உணர்வை இழந்து விட்டோம். ஒவ்வொரு இன உணர்வுகள் தோன்றி நம்மை வருத்துகின்றன. மனிதனுடைய மரியாதையையும் மதிப்பையும் நாம் மறந்து விட்டோம். அதனால்தான், காந்தியடிகளினுடைய சத்தியத்தை, உழைப்பை நாம் மறந்து விட்டோம் என்று நொந்து பேசினார் திரு. சஞ்சீவி ரெட்டி அவர்கள். 1961, 1962-ஆம் ஆண்டுகள், காங்கிரஸ் மாநாடுகள், பவ நகர், பாட்னா நகர்களில் திரு. என். சஞ்சீவ ரெட்டி அவர்கள் தலைமையில் நடைபெற்றன. 'மொழிப் பிரச்னை என்ற அபாயம் ஒரு புறமும், காங்கிரஸ்காரர்களின்சுயநல ஊழல்கள் மறுபுறமும், இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கு அழியாக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டன. இந்நிலை வருத்தத்தைக் கொடுக்கிறது. அதனால், காங்கிரஸ் கட்சியின் சரித்திரச் சிறப்புகள் எல்லாம் மறைந்து வருகின்றன. காங்கிரஸ் காரர்களாலேயே அவை களங்கப்பட்டு விட்டன என்றார் ரெட்டியார். 1963-ஆம் ஆண்டு, திரு. என். சஞ்சீவ ரெட்டி தனது தலைவர் பதவியைத் துற்ந்தார்; அகில இந்திய செயற்குழுவிலே இருந்தும் மத்திய செயற்குழுவிலே இருந்தும் ராஜிநாமா செய்து விட்டார்: அதனால் அதே ஆந்திராவைச் சேர்ந்த திரு. D.சஞ்சீவய்யா அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதலமைச்சராகப் பணியாற்றிய தலைவர் திரு. கே. காமராஜ் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அவர் புவனேஸ்வரம் மாநாட்டிற்குத் தலைமை ஏற்றிட: புவனேஸ்வரம் தனி ரயிலில் சென்று கொண்டிருக்கின்றார்!