பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. தேசியத் தலைவர் காமராஜர் ஆந்திரமாநிலத்தின் நெல்லூர் ரயில் நிலையத்தில் ஒரே மக்கட் திரள் சூழ்ந்த பேரிரைச்சல் ஸ்டேஷன் முழுவதும் மூவண்ணக் கொடிகளின் தோரணங்கள்! மக்களிடையே பரபரப்பு: இங்கு மங்கும் ஒடுகின்ற தொண்டர்கள் கையில் அசோகச் சக்கரக்கொடிகள் பறந்து ஆடின! குறுக்கும் நெடுக்குமாக நடக்கின்ற காங்கிரஸ்காரர்கள் கைகளிலே, தங்களது முதலமைச்சர் சஞ்சீவ ரெட்டி, தலைவர் காமராஜ், பிரதமர் நேரு திருவுருவப் படங்களின் கோலாகலக் காட்சிகள் எதிரொலித்தன! புவனேஸ்வரம் ஸ்பெஷல் வரும் ஓசையைக் கேட்ட மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பரபரப்புடன் மலர் மாலைகளை ஏந்தியவாறே ஜெ. ஜெ என்று குரல்களோடு முழக்கமிட்டுக் கொண்டே காத்துக் கிடந்தார்கள் பரபரப்புடன்! ای به نام مری- میل الع بیمه ایران به ثه ఫ్ల ఫ్లో ఫ్ల {