பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவேற்பும் - வாழ்த்தும்! புவனேஸ்வரம் ரயில், கூவும் நீண்டகுழலோசையுடன் நெல்லூர் ரயில் நிலையத்துள்நுழையும் போதே... 'வந்தே மாதரம்! காமராஜ் நாடார் காருகி - ஜே! காங்கிரஸ் அத்தியட்சகர் காமராஜ் காருகி - ஜே! ஜவஹர்லால் நேருகி - ஜே! சுதந்திர பாரத் மாதாகி - ஜே என்ற பேரொலி முழக்கங்களை நெல்லூர் ரயில் நிலைய மக்கள் விண்ணதிர மண்ணதிர முழக்கமிட்டுக் கொண்டே இருந்தார்கள் ரயில் நிலையம் ஒரே பரபரப்புடன் காணப்பட்டது. புவனேஸ்வரம் தனி ரயில், நீண்ட குரலெடுத்துக் கூவிக் கொண்டே 1964-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 4-ஆம் நாள் காலை 7 மணிக்கு, ஆந்திர மாநிலத்திலே, உள்ள நெல்லூர் நகர் பிளாட்பாரத்திலே வந்து நின்றது. நெல்லூர் ரயில் நிலையமே அதிர்ந்துவிடும் நிலையில், காமராஜ் நாடார்காருகி என்று ஓரணி ஓங்கிக் குரலெழுப்பியதும் கூடியிருக்கும் மக்கள் கூட்டங்கள் ஜே என்ற பேரொலியை பிற அணிகளிலே இருந்து எழுப்பிக் கொண்டிருந்தது! ரயிலிலே இருந்தபடியே, மாநாட்டுத் தொண்டர்கள், தலைவர் காமராஜ் அவர்கள் வாழ்க என்ற வாழ்த்தொலிகளை எழுப்பிக் கொண்டே இருந்தனர்: பிளாட்பாரத்தில் கூடியிருந்த ரயில்வே ஊழியர்கள் காமராஜ் நாடார்காருகி என்று குரலெழுப்பியதும் நிலையத்திலே நின்றிருந்த மக்களனைவரும், ஜே ஜே என்ற எதிர் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே நின்றனர். ஒவ்வொரு ரயில் பெட்டிகள் முன்பும் காங்கிரஸ் தொண்டர்களும் - மக்களும் தி.பு தி புவென்று கும்பலாகத் திரண்டு சூழ்ந்து கொண்டார்கள்! -