பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தேசியத் தலைவர் காமராஜர் நெல்லூர் மாவட்டக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கர்ரெட்டி, கையிலே ஏந்திய மூவண்ணக் கொடியோடு தலைவர் காமராஜ் ரயில் பெட்டி அருகே சென்று, அவருக்கு ரோஜா மாலையை அணிவித்து காமராஜ் நாடார் காருகி என்றதும், அவர் பின்னாலே அணி வகுத்துச் சென்ற ஓரணித் தொண்டர்கள் ஜே ஜே என்று அடுத்தடுத்து குரல் கொடுத்து, அவரவர் கைகளிலே இருந்த மாலைகளை அணிவித்தபடியே முழக்கமிட்டார்கள்: தலைவர் காமராஜ் அணிந்த மாலையோடும், உடன் தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் வண்டியை விட்டிறங்கி வரும்போது, அவர்கள் கழுத்திலே மலர் மாலைகள் குவியலாகவே அணிவிக்கப்பட்ட காட்சி, கண் கொள்ளாக் காட்சியாகவே அமைந்தது! சிரித்தவாறே தலைவரும் பக்தவச்சலமும் இருகை கூப்பி நமஸ்காரம் போட்டு, சங்கர் ரெட்டியைத் தனித்தனியே தழுவிக் கொண்டார்கள்! ரயில் நிலைய பிளாட் பாரத்தின் மேல் அலங்காரமாகப் போடப்பட்ட மேடைக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தேநீர் விருந்தளிக்கப்பட்டது. ஆர்வமும் - ஆனந்தமும் பொங்கி வழியும் வரவேற்பிலே, மேடையேறிய தொண்டர்கள் மலர்மாலைகளைச் சூட்டி, கூடை கூடையான உதிரிப்பூக்களால் மலர் மழை பெய்தார்கள், கடவுளுக்கு அபிஷேகம் செய்வதைப் போல! மக்கட் கடலாலே சூழப்பட்ட தலைவர், தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு விழாவும் - வாழ்த்தும் கண்டுமெய் சிலித்தார் கன்னித் தமிழிலே தலைவர் அவர்கள் கனியுரைகளை நன்றிச் சுவையோடு நவின்றதை, அருகிருந்தவர் சுந்தரத் தெலுங்கிலே பூ மழையாகப் பெய்தார் ஒரே கைதட்டல் ஆரவார ஓசை கலகலப்பாகக் களைகட்டிய சிறு கூட்டத்தின் நடுவே கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாண்டியன் பரம்பரைத் தோற்றம் தலைவர் காமராஜ் பிழிந்த கரும்புச் சுவையுரைக்குப் பின்னே, தமிழக முதலமைச்சர் சேக் கிழார் பரம்பரை பக்தவச்சலம் எழுந்து, பெரிய புராணம் பாடாமல், சிறு குறு புராணம் பாடி அமர்ந்தார். முடிந்தது வரவேற்பு மீண்டும் புவனேஸ்வரம் தனி ரயிலில் தலைவர் அமர்ந்தார்! பிறரும் அவரவர் இருக்கைகளில் அமரும்போதே, டீ, காபி வழங்கப்பட்டன: புவனேஸ்வரம் தனி ரயில், தனது நீண்ட பெரும் குழலோசைப் பெருமூச்சை விடுத்தவாறே, நெல்லூர் ரயில் நிலையத்தைவிட்டுப்புறப்பட்டது.