பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 57 எழு ஞாயிறாகக் காலையிலே எழுந்து கரகரவெனத் தன்னை எரித்துக் கொண்டு வலம் வரப் புறப்பட்ட எழு கதிரோன், அந்த ரயிலுக்கு ஒளியூட்டிச்சூடேற்றி வந்தது. பற்பல வண்ணங்களோடு பவனி வந்த உதயசூரியன், சிறிது சிறிதாக மேல் நோக்கி எழ எழ, அந்த அற்புதக் காட்சிகளுக்கு இடையே, சரியாக 7.30மணிக்கு ரயில் நீண்ட ஒசையோடு பிட்ரகுண்டா என்ற நிலையத்திலே வந்து நின்றது! பிட்ரகுண்டா கோலாகலம் பிட்ரகுண்டா நிலைய நடை மேடையிலே வண்டி வந்து நிற்பதற்கு முன்பே வான் முட்டும் முழக்கங்கள் பேரொலியாக ஓங்கி ஒலித்தன. எங்கு பார்த்தாலும் மூவண்ணக் கொடிகளை ஏந்தியோர் வாய் ஜே ஜே ஜே! என்றே ஒசை எழுப்பின! அணிவகுத்து நின்ற காங்கிரஸ் தொண்டர்கள் வரிசை வரிசையாக வந்து தலைவர் காமராஜ் அவர்களுக்குக் கழுத்து வீக்கம் பெறும் அளவிற்கு மலர் மாலைகளைச் சூட்டி, பூச்செண்டுகளைக் கொடுத்து, வணக்கமிட்டு நடந்தபடியே இருந்தார்கள். காலை சிற்றுண்டி, இட்லி, உப்புமா, பொங்கல், வடை, தோசை, காபி, டீ. அனைத்தும் பொட்டலம் பொட்டலமாக அவரவர் இருக்கைக்கே சென்று தொண்டர்கள் விருந்தளித்தார்கள். எல்லாரும் காலை சிற்றுண்டி முடித்தவுடன், வண்டி வழக்கம்போல குரலெடுத்துக் கூவியவாறே பிட்ரகுண்டா நகரை விட்டுப் புறப்பட்டது - மக்களின் வாழ்த்து முழக்கங்களோடு! தமிழ்நாட்டிலே உள்ள கோவை மாவட்டக் காங்கேயம் என்ற பேரூர், காளைமாடுகளுக்கு எவ்வாறு புகழ் பெற்றதோ, அதனைப் போலவே ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒங் கோல் நகரம் பசுக்களுக்குப் பெயர் பெற்றது. ஒங்கோல் விருந்தோம்பல் அத்தகைய ஒங் கோல் நகருக்குச் சென்று நின்றது புவனேஸ்வரம் மாநாட்டு ஸ்பெஷல் வண்டி புவனேஸ்வரம் தனிரயில் நிற்கும் நிகழ்ச்சிகளிலே ஒங்கோல் வரவேற்பு சேர்க்கப்படவில்லை என்றாலும், அந்த நகரக் காங்கிரஸ்காரர் களின் ஆர்வ மோதல்களின் நெருக்கடிகள் வழிமறித்து விட்டதால் ரயில்வண்டி அங்கே நிற்கும் நிலையேற்பட்டது. அடடா அவர்கள் மலர்ந்த முகங்கள் என்ன பெருமூச்சுகளை விட்டுக் கூவிய வாழ்த்துக்களென்ன கூடை கூடையாகத் தலைவர்