பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தேசியத் தலைவர் காமராஜர் 5 காமராஜர் கழுத்தில் வீழ்ந்திட்ட மலர் மாலைகள் என்ன வலிய வலிய அவர்கள் வழிமறித்து வழங்கிய வரவேற் பின் எதிரொலியாக, வகை வகையான பழக்கூடைகள் வண்டிப் பெட்டிகளுக்குள்ளே வலிய வந்து விழுந்தன: 'கமலா பண்டுண்டி; பெட்டுக் கொண்டி அண்டிப் பண்டுண்டி, கொய்யாப் பண்டுண்டி, சால ருசிகா உண்டுண்டி, பெட்டுக்கோணி அவத்தலாபோஞ்செய்ண்டி ஒங்கோல் பசுல்லோ ஜேசின கோவாண்டி இதி ஸ்பெஷல் கோவாண்டி, பாக ருஜிகா உண்டுண்டி!' - என்று கூறிக்கனிவகைகளையும், இனிப்புப் பண்டங்களையும், வேண்டாம் வேண்டாம் என்று தடுக்கும்போதே, பெட்டிக்குள்ளே போட்டுவிட்டார்கள்-ஒங்கோல் காங்கிரஸ்காரர்கள்: தெனாலி நகரில் சஞ்சீவ ரெட்டி சஞ்சீவ ரெட்டியின் மதியம் உணவுக்காக வண்டி புறப்பட்டது? தெனாலி என்ற ரயில் நிலையத்திலே மூவண்ணக் கொடிக் கடலை இரண்டாகப் பிளந்தபடியே சென்று நின்றது. புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்! தெனாலிரயில் நிலையம்கட்டுக்கடங்காத மக்கட்கூட்டத்தோடு ரயிலுக்குப் பின்பக்கவாட்டிலும் முன்பக்கவாட்டிலுமாகக் கரைபுரண்டு காட்சியளித்தது. கடல்போல் காணப்பட்ட மக்கள், சஞ்சீவரெட்டி காருகி - ஜே என்ற முழக்கங்களை மாறி மாறி முழங்கியபடியே நின்றார்கள்! ஆந்திர முதல் மந்திரி நீலம் சஞ்சீவரெட்டியார் மலர் மாலையுடன், தொண்டர் படைசூழ, தலைவர் காமராஜ், முதலமைச்சர் பக்தவச்சலம் ஆகியோருக்கு மாலைகளைச் சூட்டி வரவேற்றார். விருந்தினர் அனைவருக்கும் மதிய உணவுப் பண்டங்கள் தடபுடலாகப் படைக்கப்பட்டன. உண்டு முடிந்ததும் பெருங்கூட்டம் பின்தொடர, திரு. சஞ்சீவரெட்டியார் அங்கே போடப்பட்டிருந்த அழகுமேடைக்கு அழைத்துச் சென்றார். ஆந்திர முதலமைச்சர், ரெட்டியார், தலைவருக்கு மாலை சூட்டினார் பக்தவத்சலத்திற்கும் மாலை சூட்டினார். பிறகு, மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் மாலைசூட்டி அவர்களை வரவேற்றார்கள்.