பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தேசியத் தலைவர் காமராஜர் 'இதற்குப் பிறகும் கூட, ஏழை மக்கள் சுகமாக வாழ முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? உணவற்றோரும் உடையற்றோரும் - வீடற்றோரும் ஏராளமாக இருக்கிறார்களே - காரணம் என்ன? 'போட்டத் திட்டமும் செலவழித்த பணமும் என்னவாயிற்று? இதோ ஒடும் கிருஷ்ணா நதியிலே கலந்துவிட்டதா? அல்லது ஆவியாகி ஆகாயத்தில் மறைந்து விட்டதா?” 'அந்தப் பணத்தை எல்லாம் எடுத்து அனைவருக்கும் சமமாகப் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் ' 'இந்திய மக்கள் எல்லாருக்கும் உணவு, வீடு, உடை, கல்வி, சமவாழ்க்கை ஆகியவற்றைக் கொடுப்பதே காங்கிரஸ் கட்சியின் லட்சியம்' 'அதை நிறைவேற்றிடவேண்டும் என்று ஜெய்ப்பூர்காங்கிரஸ் மாநாட்டிலே கூடியோசித்தோம். அதுதான் ஜனநாயக சோசலிசத் தீர்மானம்..” “அதைச் செயல்படுத்த, ஒரு திட்டம் போட்டு, மக்கள் ஆதரவைத் திரட்டவே நாம் இப்போது புவனேஸ்வரம் மாநாட்டிற்குப் போகிறோம்!' 'அதற்கு மக்கள் ஒத்துழைப்புத் தேவை! இதற்கிடையிலே, எளிய தொண்டனாகிய எனக்கு நீங்கள் அளித்த இந்த மாபெரும் வரவேற்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். "நீங்கள் எல்லோரும் தவறாமல் புவனேஸ்வரம் மாநாட்டிற்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.' அமைதியுடனும் ஆர்வப் பெருக்குடனும் தலைவர் காமராஜ் அவர்கள் பேச்சைக் கேட்ட ஆந்திரமக்கள், காமராஜ் நாடார் காருகி - ஜே என்று, முழக்கமிட்டபடியே அவரை மேடையிலே இருந்து அழைத்துக் கொண்டு வந்து ரயிலில் அமர்த்தினார்கள். உடன் வந்தவர்களும், ஆந்திர மாநிலக் காங்கிரஸ் தலைவர்களும் - தொண்டர்களும்வண்டியிலே உட்கார்ந்தார்கள்! விஜயவாடா நகருக்கு விடை கொடுத்துக் கிளம்பிய புவனேஸ்வரம் ஸ்பெஷல் வண்டி, ஏலுரு என்ற ஊரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. பெஜவாடா காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கொடுத்த வரவேற்பையும், வாழ்த்தையும் - விருந்து உபசாரக் கோலாகலக் காட்சிகளையும் வாயாரப் பாராட்டிக் கொண்டே சென்றார்கள் - வண்டியிலே உள்ள மாநாட்டுப் பார்வையாளர்கள். தலைவர் காமராஜ் அவர்கள் பேசிய தெளிந்த கருத்துகள், புவனேஸ்வரம் மாநாட்டிலே ஆற்றியிருக்க வேண்டிய விளக்க உரை என்று அனைவரும் அகமகிழ்ந்து பாராட்டினார்கள்.