பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 61 ஏலும் எழிலரசிகள் ஆரத்தி, திலகமிடல்: தனி ரயில் வண்டி, ஏலூரு ரயில் நிலையத்தின் வாழ்த்து முழக்கங்களையும், வண்ண வண்ண சிறு, சிறு வரவேற்பு அட்டைகளை தாங்கிக் கம்பீரமாக நிற்கும் காட்சிகளையும் கண்டு, வேங்கை போல, ஓடிவந்த ரயில் தனது வேகத்தைக் குறைத்தபடியே ஆமையாக அடங்கி நின்றது. இங்கே நடந்த அற்புதம் என்னவென்றால், பிற இடங்களைவிட இங்கே காங்கிரஸ் வீராங்கனைகள் அணிவகுத்தபடியே ஒவ்வொருவராகச் சென்று ஆரத்தி எடுத்துக் கண்ணேறு கழித்து காமராஜ் அவர்களின் பரந்த நெற்றியிலே குங்குமப் பொட்டிட்டு இன்பமடைந்ததுதான்! மலர் மாலைக்குப் பதிலாகச் சிலர் முழு முந்திரிப் பருப்புகளை மாலைகளாக்கி அணிவித்து மகிழ்ந்தார்கள்! வேறு சிலர் மலர்மாலைகளையும், முந்திரிப் பழம் மாலைகளையும் சூட்டினார்கள் அனைவருக்கும் சிற்றுண்டிப் பொட்டலங்களும், காஃபி, டீ, பானங்களும் கொடுத்தார்கள், காங்கிரஸ் இளைஞரணியினர்கள். அதைவிட்டு நகர்ந்த ரயில்வண்டி, வேழ வேகத்திலே புறப்பட்டு, சிங்கம், மான், நரி, முயல் போன்ற வேக மிருகங்களோடு போட்டியிட்டபடியே நிடதவோலு, பசுவேதனை, கோவூர், கோதாவரி நிலையங்களிலே நிற்காமல், இராஜமுந்திரி ரயிலடியிலே போய் நின்றது. இராஜமுந்திரியில் பூமேடை வாழ்த்து! ஆந்திர மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவரான பொட்டிப் பாட்டு ராமையா, தலைவர் காமராஜ் அவர்களை வரவேற்றுக் கொண்டிருக்கும் போதே, ஜே முழக்கங்கள் எதிரொலித்தன. தலைவர்வண்டியை விட்டு இறங்கியதும், தமிழக முதல்வரும், பிற தலைவர்களும் இறங்கி வந்தபோது, ஒவ்வொருவருக்கும் ராமையாமாலை சூட்டினார். பூமேடையிலே விருதுநகர் வித்தகரும்; பிற தலைவர்களும் அமர்ந்த பின்பு, விழாவிற்கு மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தலைமை வகித்து, தலைவர் காமராஜ் அவர்களுக்குத் தமிழ் மொழியிலேயே வாழ்த்து வாசித்துக் கொடுத்தார்: அனைவரும் மிண்டும் வண்டியிலே அமர்ந்தனர். தேநீர், இனிப்பு, சிற்றுண்டி, பழவகைகள் அனைத்தையும் கொடுத்து விருந்தளித்தனர் - ராமையா தொண்டர்கள்!