பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தேசியத் தலைவர் காமராஜர் துவாரபுடியில் இரவு உணவு! இரவு உணவிற்காக புவனேஸ்வரம் ஸ்பெஷல் துவாரபுடி என்ற ரயில் நிலையத்தில் சென்று நின்றது. ஜே - முழக்க வரவேற்புகளும் - மலர்மாலை வாழ்த்துக்களும் முடிந்த பின்பு, அனைவருக்கும் சைவ, அசைவ உணவு பரிமாறப்பட்டது. துவாரபுடி ஊராட்சி ஒன்றியம் தலைவர், காமராஜ், தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம், ஆந்திர முதலமைச்சர் நீலம் சஞ்சீவ ரெட்டி, பிற மாநில, மாவட்ட காங்கிரஸ்காரர்கள், புவனேஸ்வரம் மாநாட்டின் பார்வையாளர்கள் அனைவருக்கும் மிகத் தடபுடலான வரவேற்பும், வாழ்த்தும், கொடுத்து மகிழ்ந்தனர்: தலைவர் அவர்களுக்கு நீலம் சஞ்சீவ ரெடடியார் வரவேற்பு வாழ்த்துமடல் ஒன்றைச்சுந்தரத்தெலுங்கிலே படித்துக் கொடுத்து, மாலை சூட்டி வரவேற்றார்! பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜே முழக்கமிட்டுக் கைதட்டிப் பாராட்டினார்கள்! தனக்குத் தந்த வரவேற்பைப் பாராட்டி தலைவர் தமிழிலே பேசினார். அனைவரையும் அவர் புவனேஸ்வரம் மாநாட்டிற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார்: கன்னித்தமிழ் சுந்தரத் தெலுங்கிலே தலைவர்ஆற்றிய எளிய தமிழ்உரையை ஆந்திரமுதன்மந்திரி என். சஞ்சீவ ரெட்டியார் அவர்கள், தெலுங்கிலேமொழி பெயர்த்தார். பேச்சுக்குப் பேச்சு கையலைகள் மோதல்! கரையலைகள் ஆரவாரம்! வரவேற்பு முடிந்ததும்,அனைவருக்கும் இரவு உணவு! விருப்பத்திற்கேற்றபடிசைவ-அசைவ உணவுகள்பரிமாறப்பட்டன. அளவளாவியவாறே அனைவரும் அகமகிழ்ந்து உண்டார்கள். பின்னர், பிரியா விடை பெற்றனர் தமிழக மாநாட்டு விருந்தாளிகள் அத்துடன், ஆந்திரமாநிலத்திலிருந்தும்மாநாட்டிற்கு வரும் பிரமுகர்கள் எண்ணற்றோர் வண்டியிலே ஏறி அமர்ந்தார்கள். ரீகாகுளம் மக்கள் காமராஜரிடம்மனு! தனி ரயில் புறப்பட்டது - துவாரபுடியை விட்டு ஓடியது. இரவெல்லாம் இடையிடையே ரயிலை நிறுத்தி வரவேற்பும் அளித்தனர். ஆந்திரமக்கள் 1964-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 5ஆம் நாள் காலை, புவனேஸ்வரம் தனிரயில் வண்டி பூரீகாகுளம் சென்று நின்றது.