பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி §3 நடை மேடை எல்லாம் மூவண்ணக் கொடிகள் ஏந்திய காங்கிரஸ் தொண்டர்கள்: திபுதிபுவென்று ஓடி வந்து தலைவர் பெட்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். காமராஜ் நாடார் காருகி - ஜே சஞ்சீவரெட்டிகாருகி ஜே! என்று தொடரலையாக மக்கள் முழக்கமிட்டபடியே இருந்தார்கள். மாநாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் குளித்திட வெந்நீர். குளித்தபின் மாற்றுக் கதராடைகளை அணிந்தார்கள். பிறகு அனைவரையும் வரிசை வரிசையாக அமர வைத்து, பந்தி பந்தியாக சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன. தலைவர்காமராஜ் அவர்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. அங்கே போடப்பட்டிருந்த மேடையிலே தலைவர் பேச எழுந்தபோது, குடியானவன் ஒருவன் ஒடோடி வந்தான். அவன் கையிலே ஒரு மனு அதைத் தலைவரிடம் அவர் கொடுக்க நீட்டியபோது, நீலம் சஞ்சீவரெட்டி அதைப் பெற்றுத் தலைவரிடம் கொடுக்க, தலைவர் மீண்டும் அதை ஆந்திர முதல்வரிடம் கொடுக்க, அவர் மனுவைப் படித்துப் பார்த்து அங்கேயே கையெழுத்திட்டுச்சம்பந்தப்பட்ட அமைச்சர்துறைக்கு அனுப்பி வைத்தார். தனக்களித்த வரவேற்புக்கும் வாழ்த்திற்கும் - விருந்து வைபவ உபசரிப்புக்கும் தலைவர் காமராஜ் அவர்கள் நன்றி கூறி, தமிழிலே பேசினார்! அதை ஆந்திர முதல்வர் தெலுங்கிலே மொழி பெயர்த்தார். இறுதியாக, அனைவரும் வண்டியிலே அமர, ரயில் வண்டி பலாசா என்ற பேரூரை நாடிப் புறப்பட்டது. பலாசா நகரில்! பலாசா வரவேற்புத்தான் ஆந்திர மாநிலத்தின் எல்லையிலே நடைபெற்ற கடைசி வரவேற்பு அவ்வூர் மக்கள், காங்கிரஸ் அன்பர்கள் அனைவரும் இதுவரை நடந்த ஆந்திர வரவேற்புகளை விட மிகச் சிறப்பாக நடத்தினர். பலாசா நகரிலே இருந்து புறப்பட்ட புவனேஸ்வரம் ஸ்பெஷல், ஒரிசா மாநில எல்லையிலே நுழைந்து பெர்ஹாம்பூர் நோக்கி விரைந்தது.