பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒ ஒரிசா மாநிலம் சிறப்புகள் சில: ஒரிசா மாநிலத்திலே உள்ள பெர்ஹாம்பூர் ரயில் நிலையத்திலே புவனேஸ்வரம் ஸ்பெஷல் பகல் 11 மணியளவில் வந்து நின்றது. ஒரிய மக்கள் தங்களுடைய ஒரியா தாய்மொழியிலே காமராஜருக்கு ஜே முதலமைச்சர் பிரேன்மித்ராவுக்கு ஜே! ஜவகர்லால் நேருவுக்கு ஜே! என்று மூவண்ணக் கொடிகளை ஏந்தியபடியே ஆரவாரமாக முழக்கமிட்டார்கள். தலைவர் காமராஜைச் சூழ்ந்து கொண்டு மலர் மாலைகளைச் சூட்டி மகிழ்ந்தார்கள்! பிறகு, அனைவருக்கும் பகலுணவு படைக்கப்பட்டது. உண்டுகளித்த பின் ஒருவரோடு ஒருவர் அளவளாவி மகிழ்ந்தார்கள். ரங்கையாதனது நண்பர்கள் சிலரையும் பெர்ஹாம்பூர் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரையும் அறிமுகம் செய்தார். இரயில் வண்டி புறப்பட்டுப் புவனேஸ்வரம் நோக்கி ஓடிக் கொண்டே இருந்தது. பகல் நேரமானதால், ஒரிசா மாநில இயற்கைக் காட்சிகளைப் பார்த்துப் பரவசப்பட்டு வரும்போது, தலைவர்காமராஜ் முதல்வர் பக்தவச்சலம் அவர்களது சந்தேகங்களையும் - விவரங்களையும் ரங்கையா விளக்கிக் கொண்டே வந்தார்! தலைவர் : ரங் கையாகாரு, ஒரிசா மாநிலத்தின் முக்கியத்துவம் பற்றி உமக்குத் தெரிந்தவற்றைக் கூறுங்களே! ցՈIտճ ԼDtԼ1fr : கலிங்கதேசம் என்பதுதான் ஒரிசா மாநிலம்! அதற்கு ஒட்ரதேசம் என்று பெயர்! புராணங்களிலே வரும் உத்கல தேசம் என்பதும் ஒரிசாவுக்குள்ள பழமையான பெயர்: பக்தவத்சலம் : கவியரசர் ரவீந்தரநாத் தாகூர், ஜன கன மண என்ற தேசிய கீதத்திலே "திராவிட உத்கல வங்கா என்ற நாடுகளின் பெயரைப் பாடியுள்ளாரே, அந்த உத்கல என்ற நாட்டின் பெயர் இந்த ஒரிசா மாநிலமா? յյT65)ւDԱյIT : ஆமாம்ஜி! தமிழ் நாட்டிலே ஒடுகின்ற வரலாற்றுச்சிறப்புப் பெற்ற காவிரியாறு போல