பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ரங் 巴荔* ரங் 乐育 ரங் தி: ரங் பக் ரங் &Sir பக் தேசியத் தலைவர் காமராஜர் ஒரியர்கள் தங்கள் வீடுகளைச் சுவர்ச் சித்திரங்களால் அழகு செய்வார்கள்! பார்க்க அலங்காரமாக வீடுகள் இருக்கும் இதற்குச் சாருகலா என்று பெயர். மூங்கில் இலைகளிலே பக்தி இலக்கியங்களை எழுதி வைப்பார்கள்! இலைகளிலே எழுதுகிறார்களா? அடடே பைபிளை ஃபேபியன் என்ற நாணல் இலைகளிலே கிறித்தவர்கள் எழுதி வைத்தது போலவா? அது நைல் நதி ஓரத்திலே வாழ்ந்த மக்கள் அவ்வாறு செய்ததால்தான், பைபிள் என்ற பெயர் வந்ததாக வரலாற்று வழக்கு ஜி! அது சரி, ஹிராகுட் என்ற இடத்தில், உலகத்திலே மிக நீளமான அணைக்கட்டை, நேருஜி அடிக்கல் நட்டு உருவாக்கியதும் இந்த மாநிலத்திலேதானே! ஆமாம் ஜி மகாநதியின் குறுக்கே தான் அந்த அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. அது மிக நீளமாகவே இருப்பதால், ஒர் ஏரி போலவே பெரிய அளவிலே காட்சி தருகிறது! மாநாடு நடைபெறும் புவனேஸ்வரம் நகருக்குச் சிறப்பு ஏதாவது உண்டா? பெங்களுர் பூங்கா நகரம்; நாகபுரியை ஆரஞ்சு நகரம் என்பது போல, புவனேஸ்வரம் நகரைக் கோவில் நகரம் என்பார்கள்: எங்க காஞ்சியைக் கூடத்தான் நகரேஷ காஞ்சி என்பார்கள் ஏறக்குறைய 526 கோவில்கள் அவ்வூரிலே இருக்கின்றன! புவனேஸ்வரம் நகரில் ஏழாயிரம் கோவில்கள் இருந்தனவாம்! எல்லாம் காலத்தால் அழிந்து, இப்போது 500 கோவில்கள் மட்டும் உள்ளதாகக் கணக்கு உள்ளது. ஒரிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் மிகச் சிறப்பும், முக்கியத்துவமும் பெற்றது. இந்துக்களில்கூட ஆசாரமான ஒழுக்கமுடையவர்களைத் தவிர, வேறு எவரையும் கோவிலுள் நுழைய விடுவதில்லை ஜி! அப்போ, இந்துக்களுக்கே இந்த நிலை என்றால்....! மற்ற மதத்தார்களை உள்ளே விடமாட்டார்கள் இல்லையா ராமையா?