பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 69 ரங் g;ST ரங் 安f了 ரா இப்போது புதிய புவனேஸ்வரம் நகர் உருவாக்கப்பட்டுள்ளது. அதனருகே, பழைய புவனேஸ்வரம் நகரமும் அப்படியே இருக்கின்றது! மாமன்னன் அசோகன் போரிட்ட இடம் எங்கே இருக்கிறது? பார்க்க வேண்டுமே அதை! அசோகன் போரிட்ட இடம் இப்போது தெளலி என்ற நகரம் அருகே உள்ளது! மாநாடு முடிந்த பின்பு நீங்கள் அதைப் பார்க்கலாம் ஜி! பிஜு பட்நாய்க் முதன் மந்திரியாக இருந்தார்.அல்லவா? அவர் செல்வாக்கு மக்களிடம் எப்படி? பிஜு பட்நாய்க் 1952-ஆம் ஆண்டு முதல் பிரதமர் நேருவின் அன்பில்இரண்டறக் கலந்தவர். 'பீஜுவை யாராவது குறை கூறினால், என்னைப் பற்றி என்னிடமே குறை கூறுவது போன்றது' என்றார்.நேருஜி. அவ்வளவு செல்வாக்குடன் அரசியலிலே திகழ்பவர் அவர்தான் புவனேஸ்வரம் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்ஜி! இவ்வாறு ராமையாவும், தலைவர் காமராஜ் அவர்களும், பக்தவத்சலமும் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது, ரயில் வண்டி புவனேஸ்வரம் சந்திப்பு நிலையத்திலே சென்று நின்றது.

“A*“A°“A* * 洽