பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ புவனேஸ்வரம் காட்டிய புதுமையான வரவேற்புகள் புவனேஸ்வரம் ஸ்பெஷல் வண்டி ஏறக்குறைய நான்கு மணி நேரங்கள் ஓடி வந்த வேகத்தைத் தணித்து, நீண்ட பெரும் ஒசையோடு ரயில்நிலையம் வந்தடைந்தது. நீரோடைகளைப் பெருக்கிவரும் மகாநதியைப் போல, மூவண்ணக் கொடிகளுடன் மக்கள் நீண்ட வரிசைகளாக ஜே கோஷங்களை முழக்கியபடியே நின்றவர்கள் சுறுசுறுப்புடன் புதையல் ஒன்றைக் கண்ட புளகாங்கிதத்தோடு தலைவர் இருந்த பெட்டியருகே ஓடிவந்து குழுமினார்கள்! கோடைக்காலப் பனிக்கட்டிகளைப் போல உள்ளமுருகி உருகிக் காமராஜ் வாழ்க என்று முழங்கியபடியே வழிந்தார்கள் - ரயில் நிலையம் முழுவதுமாக படர்ந்து வரும் மேகமாக, ரயில் நிலையத்திற்கு வெளியே நின்றவர்கள் எல்லாம் உள்ளே புகுந்தார்கள்! அனல்பட்டகந்தகம் போலச்சிதறிய ஜே முழக்கங்கள், ஒருபுறம்! சிதறுண்ட சிங்கக் குட்டிகளைப் போல ரயில்நிலையமெங்கும் ஒடிக் கொண்டிருந்தனர் பல இளந்தொண்டர்கள். இரயில் நிலையமெங்கும்பொதுமக்கட்திரள்! - பொங்குமாங் கடலலைகளைப் போல பாரத் மாதாகி ஜே. பீஜூபாபுகி ஜே! நேருஜிக்கு ஜே! என்ற ஒலி உலாக்கள் வெளிவந்தன! ஒரிசா முன்னாள் முதலமைச்சர் பிஜூ பட் நாய்க், அந்நாள் முதலமைச்சர் பிரேன்மித்ரா, ஒரிசா மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பிஜய்பாணி, மத்திய அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அனைவரும் ஒருவர்பின் ஒருவராகத் தலைவர் காமராஜ் அவர்களுக்கு மாலைசூட்டி வரவேற்றார்கள்! காங்கிரஸ் கட்சி சேவாதளத் தொண்டர்கள், தலைவர்கள், இருபுறமும் அணிவகுத்தபடியே அழைத்துச் சென்று; திறந்த ஜீப்பில் தலைவரை ஏற்றி அமரவைத்து ஊர்வலமாகப் புறப்பட்டார்கள்!