பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 71 இந்திய வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்துவிட்ட இசையும் நடனமும் கலந்த ஒடிசி நடனக்குழு நடனமாடியபடியே தலைவர் முன் சென்றது! மொகலாய சாம்ராஜ்ஜிய மன்னர்ஒருவர்பவனி வருவது போல, சோதிப்பூவா நடனக் குழு ஆடிப்பாடி அவரை வரவேற்றபடி நகர்ந்தது! எட்டு திசைகளும் எரிவதைப் போன்ற-எரிகின்ற தீப்பந்தங்களோடு ஒரியா பழங்குடிமக்களின் வீர விளையாட்டுகள்! டோய்ரியா, கோண்டா, பெங்கோ, கிஷான், கோண்டி கோயா, பார்ஜி, குயி, குவி, குரூக், ஒரான் எனப்படும் திராவிட இன வம்ச வாரிசுகள் அழகழகான ஆடைகளைப் பூண்டு அணியணியாகத் திரண்டு வரவேற்ற கோலாகலங்கள் ஒரிசா மாநிலத்துக்கே உரிய பட்டுத்துணியிலே வரையப்பட்ட பாட்டா சித்ரா ஒவியங்களோடு 'காமராஜ் வருக என்று எழுதப்பட்ட பதாகைகள்தாங்கிய அணிகள் பார்ப்பதற்கு பூரிஜகந்நாதர்ஸ்நானபூர்ணிமா விழாபோல் வந்த மக்கள் ஊர்வலம் மாட்சி சிவப்புக்கல்லிலே கலைவண்ணம் கண்ட பூமி ஒரிசா மாநிலம் என்பதற்குச் சான்றாக; சில கற்சிலைக் காரிகைகள் மத்தளம் கொட்டி ஊர்வலம் முன்னே சென்றன! மரத்தாலே செதுக்கப்பட்ட யானைச் சிற்பங்கள் ஒருபுறம்! பித்தளையிலே வடிக்கப்பட்ட வண்ண வண்ண மீன்கள் வாயுள்ளே பறக்கும் மூவண்ணக் கொடிகளின் வனப்பு மூங்கில் கூடைகளாலான பொம்மைகள் ஓரணி எருமை மாட்டுக்கொம்புகளிலே செதுக்கப்பட்ட புறாக்கள், கொக்குகள் பறந்து வந்து தலைவரை வரவேற்பது போன்ற காட்சி மறு அணி. இரண்டு சிங்கங்கள் ஒன்றோடொன்று மோதி ரத்தம் ஒழுகிக் கொண்டே போரிடும் காட்சிச் சிலைகள் பிறிதோர் அணி பெரிய மரச்சிலைப் பாவைப் பெண்களிருவர்; எரிகின்ற தீபஜோதிச் சுடர்களோடு ஊர்வலத்தை ஆரத்தி எடுத்து வரவேற்கும் அற்புதச் சிலைகள் மற்றோர்அணி. எழிலார்ந்த இந்தக் காட்சிகள் இடையே பாண்டிய நாட்டு மன்னன் ஒருவன் கலிங்கம் மீது மீண்டும் படையெடுத்தாற் போன்றமைந்த காட்சிகள் ஊர்வலத்தில் காணப்பட்டன. ஏறக்குறைய ஐந்து மைல் தூரம் இந்த ஊர்வலம் ஊர்ந்து சென்றிட்ட ஆறு மணிநேர அற்புதக் காட்சிகளை, அன்று புவனேஸ்வரம் நகர் புதுமையாகக் கண்டு புல்லரிப்புற்றது.