பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தேசியத் தலைவர் காமராஜர் புவனேஸ்வரம் மாநாடு நகருக்கு வெளியே; மறைந்த காங்கிரஸ் தியாகியான உத்கல் கோபந்து தாஸ் பெயரிலே புதியதோர் நகரமாக பொலிவுப் பெற்று அமைந்திருந்தது. தியாகி உத்கல் கோபந்து தாஸ் ஒரிசா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை அரும்பாடு பட்டு வளர்த்த மாவீரர் அவர் சிலை ஒன்று மாநாட்டு முகப்பிலே அலங்காரம் செய்யப்பட்டிருந்த தற்குத் தலைவர் காமராஜ் மாலை சூட்டும்போது, காங்கிரஸ் கட்சியின் 68-வது தேசிய மகாசபை என்பதால், 68 அதிர்வேட்டுக் குண்டுகள் வெடித்தன. கூடிய பொதுமக்கள்.அனைவரும்காமராஜ் வாழ்க என்று பெரு முழக்கமிட்டார்கள் இந்தியா சுதந்திரம் பெற்றுப் பதினேழு ஆண்டுகளான பிறகு, இதுவரை வேறு எந்த காங்கிரஸ் கட்சித் தலைவருக்கும் இப்படி ஒரு விழாவும் வரவேற்பும் நடந்ததேயில்லை! ஆவடி காங்கிரஸ் மாநாடு தேசிய சபை, தமிழ் மாநிலத்திலே அற்புதமாக நடைபெற்றதைப் பண்டித நேரு பலப்பட பாராட்டினாரென்றாலும், தமிழர் ஒருவர் பெற்ற இத்தகைய மாபெரும் வரவேற்பை எவரும் இன்றுவரைப் பெற்றதில்லை என்ற நிலை அங்கே நிலவியது! 'தமிழன் என்று சொல்லடா-தலை நிமிர்ந்து நில்லடா!' என்ற நாமக்கல்லாரின் குறிஞ்சிக் கவிதைப் பூ பூத்து அங்கே தேசபக்தி என்ற தெய்விக அழகைத் தோற்றியது! எந்த மண்ணிலே மாமன்னன் அசோகன் அகிம்சாதத்துவத்தின் அவதாரியானானோ, அதே மண்ணிலே காந்தியடிகளின் அகிம்சா தத்துவம் உலாவாக நாடெங்கும் பவனி வந்திடத் தலைவர் காமராஜ் அவர்கள் பவனி, ஒரு திருப்பு முனையாகத் திகழ்ந்த காட்சியை - புவனேஸ்வரம் மாநாடு காட்டியது!