பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவனேஸ்வரம் மாநாட்டு மேடையிலே தலைவர் காமராஜ் அவர்கள் அமர்ந்தார். அப்போது ஒரிசா முதன் மந்திரி திரு பிரேன்மித்ரா, தலைவருக்கு மலர்மாலை சூட்டினார். முன்னாள் முதல்வரும் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவருமான திரு பாபு பிஜு பட்நாய்க் தனது வரவேற்புரையை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். மாநாட்டு மேடையிலே வீற்றிருந்த பீஜப்பாணி, லால் பகதூர் சாஸ்திரி, பக்தவச்சலம், நீலம் சஞ்சீவரெட்டி, மற்ற மாநில முதல்வர்கள், தலைவர்கள் உட்பட முக்கியமான அனைவரும் மாலை சூட்டித் தலைவர் அவர்களைப் பாராட்டினார்கள். இந்த நேரத்தில் பாபு:பிஜு பட்நாய்க் பரபரப்புடன் எழுந்து வந்து தலைவர் காமராஜ் அவர்களிடம், பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகைதந்ததும் திடீரென அவரால் நடக்க முடியாமல்; அப்போது ஒரு பக்கக் கை, கால் செயல்படாமல் இருக்கும் உடல் நலிவையும் கூறிட, அனைவரும் பதைபதைத்து எழுந்தார்கள் அப்போதே அனைவரும் அங்கும் இங்குமாகப் பரபரப்புடன் எழுந்து ஓடினார்கள்: உடனேயே திரும்பி பிரதமர் நேரு அவர்கள் தக்க மருத்துவ சிகிச்சை பெற டில்லிக்கே சென்றுவிட்டார் என்ற மறு செய்தியும் வந்தது! இந்தச் செய்தி மக்களிடையே பரவி, மாநாடு பரபரப்புடன் காணப்பட்டது! காமராஜ் அவர்களும் பிற தலைவர்களும் சோகமே உருவமாக மீண்டும் வந்து அமர்ந்தார்கள்! பிரதமர் நேரு கலந்து கொள்ளாத மாநாடா என்ற துயரநிலை மேலோங்கி, அருவி ஒன்று அரிக்கும் நிலம்போல அவர்கள் மனதைக் கவலைகள் அரித்தன! பெருந்தலைவர் பேசுகிறார்: தலைவர் காமராஜ் அவர்கள் நிலைகுலைந்தவராய் பேச எழுந்தார், தழுதழுத்த குரலோடு பேச நா எழாமல், ஆனால் கூடியுள்ள மக்களிடையே குழப்பம் சூழாமல், நிலைமையை