பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தேசியத் தலைவர் காமராஜர் ஒரளவு சமாளித்துப் பேச முற்பட்டார்: "தியாகி கோபந்துதாஸ் திடலிலே திரண்டிருக்கும் பொது மக்களே காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களே தொண்டர்களே! வணக்கம் ' என்று தமிழ் மொழியிலேபேசினார். இலட்சக் கணக்காகக் கூடியுள்ள மக்களுக்கு அவர் தமிழ் மொழியில் பேசியது புரியாததால் சிறு சலசலப்பு மாநாட்டிலே காணப்பட்டது: தமிழ்நாடு காங்கிரசைச் சேர்ந்த, ஜி. இராஜகோபாலன் உடனே தலைவர் பேச்சை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்தார். மீண்டும் அவர் தனது உரையைத் துவங்கியபோது ஒரே கை தட்டும் மகிழ்ச்சி பூத்தது! “பிரதமர் நேரு அவர்கள் உடல்நிலை சரியில்லை! 'நேரு இல்லாத மாநாடாக இது காட்சியளிக்கின்றது; எனவே, நாம் கடமையோடும், கட்டுப்பாடோடும் செயலாற்ற வேண்டிய நிலையிலே இந்த மாநாடு உள்ளது. அவர் முழு உடல் நலம் பெற்று மீண்டும் நமக்கு வழி காட்ட வேண்டுமென்று கடவுளை வேண்டிப் பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்! 'இந்திய தேசியக் காங்கிரசின் 68-வது மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்தும் தலைமைப் பதவியை எனக்கு நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டைச்சேர்ந்த சாதாரணக்காங்கிரஸ் தொண்டன் நான்! ஆனால், என்னிடம் பெரும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறீர்கள்! அதற்காக எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!" “உயர்ந்த இந்தப்பதவிக்கு என்னை ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து, உங்களுடைய உயர்ந்த அன்பை என்மீது பொழிந்திருக்கிறீர்கள்! 'சென்னை மாநகரிலே இருந்து மாநாட்டிற்கு நான் புறப்பட்டவுடன், ஆந்திரமாநிலத்திலும், பின்பு:ஒரிசாவில் நான்கால் வைத்ததும் எனக்கு எல்லோரும் அளித்த வரவேற்பிற்கும் வாழ்த்திற்கும், நம்பிக்கைக்கும், நான் என்னுடைய கடமைகளை உங்களது தொண்டனாகவே திகழ்ந்து பணியாற்றுவேன்!" "தியாகி கோபந்து தாஸ், இந்திய தேசிய இயக்க வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் அந்த மகானின் பெயரை இந்த மாநாட்டுத் திடலுக்குச் சூட்டி நன்றி காட்டியிருக்கிறீர்கள் அவரது சேவையை நான்மதித்து வணங்குகிறேன்!” 'ஆலன் அக்டேவியன் ஹியூம் என்ற மனித நேயரால் துவங்கப்பட்ட இந்த இந்திய மகாசபை, இதுவரை 67 மாநாடுகளை நடத்திய பின், இது 68-வது மாநாடாகத் தோற்றமளித்துள்ளது."