பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 75 'இலட்சக்கணக்காகக் கூடியிருக்கும் உங்களது ஆதரவால்தான், காங்கிரஸ் இன்று இவ்வளவு பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. அந்த நன்றியை வரலாறு மறக்காது.” அறிவிலும் ஆற்றலிலும், தியாகத்திலும், கடமையிலும் நம்மைவிட பலமடங்கு சிறந்து உழைத்து அரும்பாடுபட்ட சான் றோர்களையும் நாம் இப்போது நினைந்து வீரவணக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்!" 'அந்த மாமேதைகள் காட்டிய வழிகளிலே நாம் வளர்ந்தவர்கள்! அதனால், நமது நாடு சுதந்திரத்தைப் பெற்றது! அவர்கள் சிந்தனைகளை நாம் போற்றி மனதிலே பதித்துக் கொண்டு, நமது சமதர்ம சோசலிசப் பயணத்தைத் தொடர்கின்றோம்! சுதந்திரம் கிடைத்தால் நாம் சுகமாக வாழலாம் என்று ஏழை மக்கள் ஆசைப்பட்டார்கள் அதிலே என்ன தப்பு?' “மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைப் போட்டோமே! அதனால் என்ன லாபம்? ஏழை மக்களுக்கு அந்தத் திட்டங்களின் பலன் போய்ச் சேர்ந்ததா? இல்லையே! ஏன்? என்ன ஆயிற்று அந்தத் திட்டங்களிலே போட்ட கோடி கோடி பணமெல்லாம்? ஒரிசாவிலே ஒடுகின்ற மகாநதியிலே கலந்து விட்டதா? இல்லை!" “ஒரு சில பணக்காரர்களிடம் பணம் மேல் பணமாகப் போய் குவிந்து கிடக்கிறது! அதை நாம் தடுக்க வேண்டாமா?" (கைதட்டல்) பணக்காரர்களிடம் சென்று சேர்ந்துவிட்ட பணத்தை மீண்டும் எடுத்து, ஏழை மக்களுக்குச் சமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டாமா? (வேண்டும், வேண்டுமென்று கையொலி) 'ஏழை, ஏழையாகவே இருக்க வேண்டுமா என்ன? எப்போது ஏழை சுகமாக ஜீவிப்பான்? இந்தக் கேள்வியை ஏழை மக்கள் கேட்பது எப்படி தப்பாகும்? '(கையொலி) 'நமது பொருளாதார முன்னேற்றத்தின் நடைமுறையில் கவலைப்பட வேண்டிய சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன! செல்வம் ஒரே இடத்தில் சென்று சேர்வதால் தொழில்களில் சிலரது ஏகபோக ஆதிக்கம் வளர்ந்து கொண்டே போகிறது!" " எப்படி அவர்களிடம் அந்தப் பணம் போய்ச் சேருகிறது? வரியை ஏய்ப்பது, பற்றாக்குறை இருக்கும் பொருள்களில் கள்ளச்சந்தை, உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது போன்ற அடாத செயல்களே அதற்குக் காரணம்! வியாபாரத்தில் நேர்மை இல்லை! வியாபார ஒழுங்கும் சீர்கெட்டு வருகின்றது! இந்த விஷயத்தில் எல்லா அரசுகளும் சரியான நடிவடிக்கை