பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தேசியத் தலைவர் காமராஜர் எடுத்ததாக வேண்டியிருக்கிறது! அதற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன?” “சோசலிசமே நம் இலட்சியமாக இருப்பதால், பொருளாதார பலம் சிலரிடம் குவிவதையும், வம்சவாரியாக இது தொடர்ந்து வளர்வதையும் நாம் தடுத்தாக வேண்டாமா? தடுக்க முடியாவிட்டால், இந்தச் சீர்கேடுகள் தங்கு தடையின்றி நடந்து கொண்டே போகாதா?" "அதை அனுமதித்தால், நிச்சயமாக நம் முன்னேற்றத்திற்கு அது முட்டுக்கட்டையாகாதா? பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குவதாகாதா? இந்த நாட்டின் சட்டதிட்டங்களும் - நிர்வாக முறைகளும் - மக்கள் தங்களுக்கென்று அமைத்துக் கொண்டிருக்கும் சோசலிச லட்சியத்தை நிறைவேற்றி வைக்கப் பாடுபடுகின்றனவா?" "இதை நாம் சிந்திக்க வேண்டிய நிலையிலே தான் - இன்று இங்கே கூடியிருக்கின்றோம். இந்த வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வித முன்னேற்றம் நடந்திருக்கிறது என்பதை, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி ஆராய வேண்டும்' 'ஏகபோகத் தொழில்கள் வளர்வதைத் தடுக்க, வேண்டிய நடவடிக்கையை விரைவாக நம்முடைய அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இந்த நாட்டில், ஏக போகங்களாக இருக்கும் தொழில்களின் நிலைமையை நாம் ஆராய வேண்டும். புதிய தொழில்களை விரிவாக்கம் செய்து, புதிய தொழில்களை ஆரம்பிக்க வேண்டும். 'எல்லா மாநிலங்களிலும், செகண்டரிக் கல்வி வரையில் இலவசக் கல்விமுறையைப் படிப்படியாக அமுலாக்கிட ஒவ்வொரு மாநிலமும் முயற்சி செய்தாக வேண்டும்!" 'காங்கிரஸ் கட்சி ஒரு செயல் முடிவுக்கு வந்துவிட்ட பிறகு, அதற்கு உடன்பட்டு, அதை ஏற்றுக்கொண்டு, அதன்படி நடந்தாக வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் புனிதமான கடமையாகும்.' "கொள்கை சம்பந்தமாக ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்த பிறகு, காங்கிரஸ்காரர்கள் வெவ்வேறு விதமாகப் பேசி வருவதும், ஒருவர் மேல் ஒருவர் குறை கூறிக் கொண்டிருப்பதும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.' 'அதனால், நாம் ஒன்றுபட்டு, நாட்டின் வளர்ச்சி லட்சியத்தில், கட்டுப்பாட்டுடன்கடமை வீரர்களாகப் பணியாற்றிடவேண்டும்."