பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 77 'மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் பணியாற்றும் பாக்கியம் முன்பு நமக்கு இருந்தது. காந்திஜியின் வழி வந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்! அதனால் அவர்கள் தாங்கள் மேற்கொண்ட சிறந்த லட்சியத்தையும், உயர்ந்த ஒழுக்கத்தையும் கடைப் பிடித்தாக வேண்டும்!” 'பிற கட்சியைச் சேர்ந்தவர்களிடம் எதிர்ப்பார்ப்பதை விட, உண்மையில் காங்கிரஸ்காரர்களிடத்தில் தான் மக்கள் நாட்டு நலத்தை எதிர்பார்க்கிறார்கள்!' 'நமது அன்றாட நடத்தையில், காந்தீய வழியை நாம் கடைப் பிடித்தாக வேண்டும் என்று நான் எல்லோரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.' “மகாத்மா காந்தியிடம் இருந்த மகத்தான அருங்குணங்களில் முக்கியமாகப் பிரகாசித்தவை இரண்டு அவை, சத்தியம், நடத்தையில் மனித வர்க்கத்திற்குச் சேவை" என்பவையே!” 'நாம் கனவு கண்டு வந்திருக்கும் நவஇந்தியாவை, இந்த எளிதான இரு கருவிகளைக் கொண்டு நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்! வணக்கம்!” இப்படி பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பேசிமுடித்ததும், கூடியிருந்த மக்கள் 'பெருந்தலைவர் காமராஜ் வாழ்க, பிரேன் மித்ரா வாழ்க, பிரதமர் நேருஜி வாழ்க, பாபு பட்நாய்க் வாழ்க’ என்ற முழக்கங்களை முழங்கினார்கள்! பிரதமர் நேரு அவர்கள், டில் லி சென்று சேர்ந்ததும் புவனேஸ்வரம் மாநாட்டிற்குத் தனது வாழ்த்துச் செய்தியை முதல்வர்.பிரேன்மித்ராவுக்கும், தலைவர்காமராஜ் அவர்களுக்கும் அனுப்பி வைத்தார்: ஜனவரி ஐந்தாம் நாள் கூடிய மாநாடு 10-ஆம் நாள் இரவு 7மணி வரை, பெருந்தலைவரின் இறுதி உரையோடு முடிந்தது.