பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ெதின் பின்னன காமராஜ் பிறந்த ஆண்டு 1903 இந்தியா முழுவதுமுள்ள மாநில மாநகர்களில், ஒவ்வொரு ஆண்டு தோறும் நடைபெற்றுவரும் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை மாநாடு, தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரிலே, காமராஜ் என்ற குழந்தை பிறந்த அதே வருடத்தில் தான்.அதாவது 1903-ஆம் ஆண்டில்தான் நடைபெற்றது! அதே அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டிற்கு, 61 - ஆண்டுகள் கழித்து இதே காமராஜ் என்ற குழந்தைதான் பெருந்தலைவராகப் பொறுப்பேற்கபோகிறது என்ற வரலாறு யாருக்குத்தான் தெரியும்? அந்த ஆண்டு சென்னை மாநாட்டின் தலைவராக அமர்ந்த லால் மோகன் கோஷ் அவர்கள் , ஆங்கில ஆட்சியின் ஆதிக்கச் சட்டங்களின் நிர்வாகக் கொடுங்கோன்மைகளைக் கொல்லேறு போல நிமிர்ந்து நின்று குரல் கொடுத்தார்! அறுபத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு புவனேஸ்வரத்தில் நடைபெற்ற அதே அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி மாநாட்டில், இந்தியா சுதந்திரம் பெற்ற பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர், பணக்காரர்களை எதிர்த்து, ஏழைகள் வாழ்வு பெற்றிட, சமதர்ம சோசலிசசங்கநாத ஒலியை ஊதப்போகிறது இந்தக் குழந்தை என்று - அதே 1903- ஆம் ஆண்டில் அது தோன்றியது போலும்! ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தின் தோற்றம்! இராமநாதபுரம் அருகே உள்ள பாலவ நத்தம் ஜமீன்தாராக இருந்த திரு பொன்னுசாமித் தேவரின் திருமகனாரான பாண்டித் துரைசாமித் தேவர், சிறந்த தமிழபிமானி! தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டில், முதல், இடை, கடை என்ற மூன்று முத்தமிழ்ச் சங்கங்களுக்குப் பிறகு, தமிழை - தமிழறிவை வளர்த்திட மீண்டும் ஒரு தமிழ்ச் சங்கம் தேவை என்று அவர் உணர்ந்தார்!