பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 79 கி. பி. 470-ஆம் ஆண்டில், பூஜ்ய பாதர் என்ற சமண முனிவரின் மாணவராக இருந்த வச்சிர நந்தி என்பவரால், தென் மதுரையிலே gogglögågålølba-(5amālīLil' l-gi. (Bombay Royal Asiatic Society's Journal Nox LIV, Vo x VII, PP.74) g@@TT @g ß\6y6v%&6fi6v<y6v. இந்த நான்காம் தமிழ்ச் சங்கம் அழிந்த வரலாற்றைக் கண்ட தமிழ்த் தேவர்.பாண்டித்துரை அவர்கள், அதே மாவட்ட மண்ணில், மதுரை மாநகரில், பெரும் பொருட் செலவில் இன்றும் இயங்கி வரும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கினார்: தேவரின் அந்தத் தமிழ் ஞானப் புரட்சி, 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகுள்ள 18 மாதக் காலச் சூழ்நிலையில், காமராஜ் என்ற குழந்தை பிறந்ததினாலோ என்னவோ, அதே குழந்தை தமிழக முதலமைச்சரானதும், கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தோற்றுவித்து 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்ற சட்டத்தைத் தாய் மொழிப் புரட்சிக்காக இயற்றி வித்திட்டுப் பச்சைத் தமிழர் என்ற புகழையும் பெற்றதல்லவா? 'கொடை மடங்கொண்ட கோமான் திரு. பாஸ்கர சேதுபதி அவர்கள் 1888-ஆம் ஆண்டு முதல் 1903-ஆம் ஆண்டு வரை இராமநாதபுரம் மன்னராக இருந்தவர். அறிவையே விவசாயமாகப் புரியும் தமிழ் வேளாளர் அவர்! சென்னையிலே உள்ள சைவ சித்தாந்த சண்ட மாருதம் சோமசுந்தர நாயகர் பெருமானை சைவஞானக் குருவாகக் கொண்டவர்: சைவ சித்தாந்த சண்டமாருதம்! தமிழ்க் கடல் மறைமலையடிகளாரும், அருட்டிருசோமசுந்தர நாயகரைத் தான் தமது சமய ஆசானாக ஏற்றுக் கொண்டவர் சைவ சித்தாந்த சண்டமாருதம் நாயகர் பெருமான் இயற்பெயர் அரங்கசாமி. வைணவக்கடலில் மூழ்கி சமய ஞானமுத்தைப் பெற நினைத்தார்! ஆனால், சைவ சமயமாக்கடலிலே மூழ்கி ஆன்மஞான முத்தை எடுத்து அவர் உலகுக்குப் போதித்தவர் அந்த நேரத்தில், வேதாந்த வித்தகர் இராமகிஷ்ண பரமஹம்சரைத் தமது ஆன்மிகஞானபோதனைக் குருவாக ஏற்றவர் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ மாநகர் சர்வமத மாநாட்டில் கலந்துரையாடிடும் அழைப்பு அவருக்கு வந்தது. அந்த அழைப்பை ஏற்ற அருட்டிரு விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவிற்குப் போய் திரும்பும் பயணச் செலவுகள் அனைத்தையும், இர்ாமநாதபுரம் மன்னர் சேதுபதி ஏற்று அவரை அனுப்பி வைத்தார்!