பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O தேசியத் தலைவர் காமராஜர் மன்னர் உதவியால் சிகாகோநகர் சென்ற அந்த இளைய சிங்கம், அந்த மாநாட்டிலே அற்புதமாக உரையாற்றி வேதாந்த கேசரி (The Monk of India) என்ற விருதினைப் பெற்று பாம்பன்துறைமுகத்தை வந்தடைந்தார். கப்பலை விட்டுக் கீழே இறங்கும் வித்தகர் விவேகானந்தரைப் பார்த்து, 'தங்கள் வேதாந்தக்கால் இந்திய மண்ணிலே முதன்முதல் படக்கூடாது. என் தலையிலே வைத்து ஆசி கூறுங்கள்' என்று, மன்னர் சேதுபதி தனது தலையை அவரிடம் நீட்டினார் மன்னருக்கு இருந்த நாட்டுப் பற்றும், மதப் பற்றும், அறிவுப் பற்றும் எதைக் கொண்டு அளந்து பார்ப்பதோ... பராபரமே! சமயத் தென்றலும் மொழிப் புரட்சியும்! 1937-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரை எதிர்த்து, நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் பேசினார். அப்போது, 'தமிழ்த் தாயின் தாள் மீது, கால் வைப்போர் தலைமீது கால் வைப்பேன்' என்று அவர் வீரமுழக்கமிட்டார். தாள் மீது கால் வைப்போர் தலைமீது கால் வைப்பேன் என்ற பாரதியார் குரல், எதிர்ப்பிலே தோன்றிய எரிமலைப்புரட்சிக் குரல்! ஆனால், பாஸ்கர சேதுபதியின் ஆன்மீகத் தென்றல் தொனியோ, இந்துமத ஞான நிறைவால் கனிந்த குரல்! இந்த இரு குரல்களின் ஞானப் பற்றின் இருப்பிடமாகத் தவழ்ந்த தமிழக மண்ணின் தொன்மையை எப்படி ஏற்றிப் போற்றுவதோ? மன்னரின் அன்பான பண்பால் அவர் நீட்டிய தலையைக் கண்டு அதிர்ச்சியால், உடலும் உயிரும் உள்ளமும் அதிர்ந்து போனார் அடிகளார். அதனால், அரசர் பிரான் தாம் அமர்ந்து செல்லும் இழுவை வண்டியிலே அடிகள் பெருமானை அமரச் செய்து இராமநாதபுரம் வீதிகளிலே எல்லாம் அவ்வண்டியை இழுத்து வலம் வந்தார் என்றால், அறிவுப் புரட்சிக்கு அவர் கொடுத்த அரியணைக்கு எதனை உவமிப்பதோ? இந்தக்காட்சியை கண்ட ஆண்களும் - பெண்களுமான அவ்வூர் மக்கள். ஒர் அறிவார்ந்த ஞானயோகி ஊர்வலம் வருவதாக அறிந்து, ஆரத்தி எடுத்துப் பொட்டிட்டு வணங்கி வரவேற்றார்கள்.