பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 8? அறிவுப் புரட்சி - ஞானப்போர் அமெரிக்காவையே வென்று வந்த வேதாந்த ஆன்மிக அறிவின் ஞானத்தோடு, தமது வேதாந்த - சித்தாந்த ஞானப் பழமான ஆசான் நாயகரை வாதிடச் செய்து, ஞானப் புரட்சியை ஞாலத்தின் உயர்விற்கு வித்தாக்க விரும்பினார் சேதுபதி: சென்னையிலே இன்று விவேகானந்தர் இல்லம் என்று போற்றப்படும் இடம் அன்று ராமநாதபுரம். மன்னர் இடம். இந்த இடத்தில் விவேகானந்தரை அன்று மன்னர்தங்கவைத்தார். அன்று வெள்ளையன் காலத்திலே ஐஸ் கட்டிகளை உற்பத்தியாக்கிடும் ஐஸ் அவுஸ் என்ற பெயரோடு அது அமைந்திருந்தது! விவேகானந்தர் அங்கே தங்கியதால், அந்த இடம் இன்று விவேகாந்தர் இல்லமாக அழைக்கப்படுகின்றது! மன்னர் சேதுபதி அவர்களுக்கு மற்றோர் மாளிகையும் சென்னையில் உண்டு! அது ஆங்கிலேயர் நிர்வாகத்திற்குள் வந்தபோது பெருவிருந்து படைக்கும் கூடாரமாக (BAN QUETNG HALL) lossops. அந்த மாளிகையிலேதான், மன்னர் சேதுபதி தனது ஐம்பது வயதுடைய ஞானாசிரியரான நாயகருக்கு இருபத்தெட்டே வயதுடைய இளம் வேதாந்த அரிமாவை அறிமுகப்படுத்தி, இருவரையும் சைவசித்தாந்த வாதப்போருக்கு ஒப்பவைத்தார்: சோமசுந்தரநாயகர்மாநகராட்சி எழுத்தர்பணியிலே இருந்தார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார்! ஆங்கிலத்தில் பேசினால் புரிந்தவர்; ஆனால் விவேகானந்தர் நாவைப் போல் தத்துவத் தர்க்கங்களிலான ஆங்கில வித்தகம் புரியாது. அதனால், மன்னர் சேதுபதி அவர்களே, வித்தகர் விவேகானந்தரின் தத்துவ உரை வீச்சுக்களை எல்லாம் தமிழில் மொழி பெயர்க்கும் பொறுப்பை ஏற்றார். அவை கூடியது. அறிவு சான்ற அரிமாக்கள் கம்பீரமாக அமர்ந்தன: காண்போர் கூட்டமோ அறிவுக்கு அழகூட்டும் அறிவாகக் காட்சி தந்தது! ஆன்மீக உரையை முதலில் தொடுப்பது யார் என்ற போது விவேகானந்தர் பெருமான், நாயகர் தம்மின் மூத்தவர் அவர் பேசுவதுதான் பொருத்தம்' என்றார். சைவ சித்தாந்த சண்டமாருதம் எழுந்தது. 'நான் மூன்று வினாக்களை மட்டுமே விடுப்பேன்! அதற்கு நம் இளம் அரிமா