பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தேசியத் தலைவர் காமராஜர் விடை கொடுத்தால், வாகைப்பூ அவருக்கே சூட்டி மகிழ்வேன்' என்றார். எனது முதல் வினா, வேதம் அநாதியா? இறைவன் அநாதியா) - என்றார்: வித்தகர் விவேகானந்தர், வேதம் ஆதி என்பதற்கான வடமொழிச் சான்றுகளை எல்லாம் ஆரவாரமான ஆங்கில அலங்கார அழகுகளோடு வாரி வாரி வீசினார். அவையில் ஊசி விழுந்தாலும் கேட்கும் அமைதி: நாயகர் பெருமான் இடைமறித்தார்: வேதம்தான் ஆதி: என்றால், இறைவன் அநாதியல்லனோ இறைவன் தானே வேதத்தை அருளிச் செய்தவர் என்று கூறப்பட்டுள்ளது! எனில், வேதம் அநாதி என்பது முரணாயிற்றே என்றார்: வேதாந்த கேசரியான விவேகானந்தர், மீண்டும் மீண்டும் வடமொழி வேதாந்தச்சான்றுகளை எளிதாக எடுத்து வாதமிட்டார்: இடையிடையே சிறுசிறு சினம் கலந்த முகத்தோற்றமும் தொய்வும் காணப்பட்டன. இறுதியாக, "வேதம் அநாதி! . இறைவனும் அநாதி” என்றார். சண்டமாருத நாயகர் பெருமான் தன் குரலைத் தென்றலெனப் படரவிட்டு, சான்றுகள் எல்லாம் தேவையற்றவை வேதமா? இறைவனா? அநாதி யாது? இரண்டில் ஒன்றிற்கு விடை கூறும் அப்பனே!” என்றார். விடை விளக்க இயலாத நிலையில் விவேகானந்தப் பெருமான், சோர்ந்து அமர்ந்தார். அருட்டிரு நாயகர் அவர்கள் மீண்டும்; பொருள் அதாவது வஸ்து - ஒன்றா- இரண்டா' என்ற கணையைத் தொடுத்தார். ஒன்றுதான் என்பதற்கான, காரண காரியங்களை அவையிலே ஒழுங்குபடுத்தி எடுத்து விளக்கினார் விவேகானந்தர். நாயகர் இடைமறித்தார்: “நீங்கள் கூறுவது போல், கடவுள் ஒன்றுதான் என்றால், உலகும் உயிரும் ஆய பொருள்கள் உளவே!” என்றார்: முதல் வினாவிலேயே சோர்ந்து போன விவேகானந்தர், இரண்டாவது வினாவிற்கும் விடையிறுக்க இயலாமல், பற்பல வாதங்களை வைத்தார்: பொருந்துமாறு ஒன்றும் அமையாமையால், திக்கித் திணறி அவர் மீண்டும் தனது இருக்கையில் இருந்தார்.