பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 87 பங்களில் எல்லாம் தம் அறிவையும் அனுபவத்தையுமே துணைகொண்டு செல்லல்வேண்டும். உதாரணமாக ஒன்று நோக்குவோம். திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட பின், பல ஊர்கள் தோறும் சென்று இறைவனை வழிபடுதலைக் கடப்பாடாகக் கொண்டார். இவ்வளவில் அறிந்துகொள்வதும் எந்த எந்த ஊர்கள் சென்றார் என்று அறிவதும் சரிதங் கூறவரும் ஆசிரியனுக்குச் சுலபம். ஆனால், எந்த ஊருக்கு முதலில் சென்றார் என்று அறிவது இயலாததாகும்; எனினும், சேக்கிழார் பின்வருமாறு பாடுகிறார்: 'அக்நிலையில் ஆளுடைய பிள்ளையார் தமைமுன்னம் அளித்த தாயார் முன்னுதிக்க முயன்றதவத் திருகன்னி பள்ளிமுதல் மறையோர் எல்லாம்" வந்து திருஞானசம்பந்தரைத் தமது ஊராகிய நனிபள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள் என்று சேக்கிழார் கூறுகிறார். இவ்வாறு கூறக் காரணம் என்ன? உலகியல் அறிவு ஒன்று தான் ஆசிரியரை இவ்வாறு பாடச் செய்தது. திருஞான சம்பந்தருடைய செயற்கருஞ் செயலால் பெருமதிப்பு அடைந்த வர்களில் இவர்கள் இரண்டாவதாக உள்ளனர். முதலாவதாக உள்ளவர்கள் சிவபாதவிருதயராகிய தந்தையின் ஊராகிய சீர்காழியில் உள்ளவர்கள். அடுத்தபடியாகத் தாயின் ஊர்க் காரர்கள் மதிப்புக் கொள்வது இயற்கைதானே? தங்கள் ஊர்ப் பெண்ணாகிய பகவதியார் பெற்ற குழந்தை செயற்கருஞ் செயல் செய்தது என்றால், அக்குழந்தையைத் தங்கள் ஊருக்கு அழைத்து வந்து அதனால் தாங்கள் பெருமை அடைய அவர்கள் முதன் முதலில் நினைந்தார்கள் என்பது எவ்வளவு பொருத்தமுடையது. தமது கூரிய உலகியல் அறிவால் இதனை நன்கு உணர்ந்த சேக் கிழார்,