பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தேசீய இலக்கியம் எடுத்துக் கொண்டார் என்று சமாதானம் கூறலாம். அதே சுந்தரர், சங்கிலியாரையும் விரும்பி மணந்து திருவொற்றி யூரிலும் வாழ்ந்தாராதலின் அவ்வூரும் பாடப்பெற்றிருக்கலாம். அவ்வாறு இல்லையாதலின் அந்தச் சமாதானமும் வாய்ப் புடையதாகத் தெரியவில்லை. திருத்தொண்ட புராணத்திற்கு அடிப்படையாக உள்ளவை நாயன்மார்கள் வரலாறுகள். அந் நூல் எடுத்துக் கொண்ட அறுபத்து மூன்று நாயன்மார்களில் முப்பத்தேழு பேர் சோழ நாட்டினர். முன்னர்க் கூறப்பெற்றபடி இந் நூலை ஒரு தேசீய இலக்கியமாகக் கொண்டால் அனைத்தும் நன்கு விளங்கும். தேசீய இலக்கியமாகிய இந் நூலின் அடிப்படை அடியார்கள் வரலாறு அன்றோ?. அவர் களுள் பெரும்பாலோர் வாழ்ந்தது சோணாட்டிலாகும். எனவே, ஆசிரியர் சோணாட்டைப் பாட எடுத்துக்கொள்கிறார். மேலும் தம்மை ஆதரித்த சோழனாகிய அநபாயனு டைய நாடும் அதுவாக இருந்தது. அக் கருத்திற்கு வன்மை அளித்தது. இனி, அடுத்துக் காணவேண்டியது திருவாரூரை ஏன்பாடினார் என்பது. எவ்வளவு பெரியவராகச் சுந்தர் மூர்த்திகள் இருப்பினும், இறைவனாலேயே அவர் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றிருப்பினும் அவையெல்லாம் அவர் வீடு பெறுவதற்கு, மட்டுமே வழி செய்தன. ஆனால், அவர் திருவாரூரில் தேவாசிரிய ம ண் ட பத் தி ல் அடியார்களைச் சந்திக்காமல் இருந்திருப் பாரேயாயின் திருத்தொண்டத் தொகை தோன்றி இராதன்றோ? அஃது இல்லையாயின் தமிழ்நாட்டில் தோன்றி நிகழ்ந்த இந்தச் சமயப் புரட்சியை யாரும் அறிய முடிந்திரரது அன்றோ இதனை உலகம் அறியச் செய்த பெருமை திருவாரூரைச் சாரும். ஆதலால், சேக்கிழார் அவ்வூரைப் பாட எடுத்துக் கொள்கிறார். சுந்தரர் வாழ்க்கையிலே பெரிதும் ஈடுபட்டவர் சேக்கிழார். ஆனால், சுந்தரை இறைவன் தடுத்து ஆட் கொண்டதிலும் இறைவனை அவர் தூது ஃே