பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. தேசிய இலக்கியம் "மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும் பாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும் யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும் போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும்" "தொண்டர்தம் இருக்கைாங்கும்......" (பெ.பு.-திருநாட்டுச் சிறப்பு, 31, 82) என்று பாடுமாற்றால் பின்னர் வரப்போவதை அறிவிக்கிறார். யாகத்தையும் சடங்கையும் கூறிய உடனேயே இன்பமும் மகிழ்வும் பேசப்பெறுகின்றன. அன்றியும், யோகமும் தவமும் கூறப்பெற்ற அதே அடியில் போகமும் பொலிவும் பேசப்பெறுகின்றன. இந்தப் பாடலே இல்லறம் துறவறம் என்ற இரண்டின் இடையேயும் வேறுபாடு காணாதவர்கள் வரலாறே இங்குப் பேசப்பெறும் என்பதை அறிவுறுத்தி நிற்கின்றது. முன்னர் உள்ளதும் மக்கள் மனத்தைக் கவர்ந்ததுமான சிந்தாமணிக் காப்பியத்தில் சிற்றின்பச் சுவை மிகுதியும். அரசன் பல மனைவியரை மணந்த செய்தியும் அன்றோ காணக்கிடக்கின்றன? தம்முடைய காப்பியத்திலும் ஒரு வேளை மக்கள் அதனை எதிர்பார்ப்பார்களோ என்று ஐயுற்ற ஆசிரியர் முதலிலேயே அதனை மறுக்கிறார். அதனாலேயே திருக்கூட்டச் சிறப்பு என்ற ஒரு பகுதி காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பதினொரு பாடல் களும் தனியே இருப்பவை. இப்பகுதி இன்றியும் நூலின் முழுத்தன்மை குறையாமல் நிலவும். என்றாலும், திருத் தொண்டர் புராணத்தின் உயிர்நாடி இப்பகுதிதான். காப்பியம் என்னும் மரபுக்கேற்ப நாட்டுவளம், நீர்வளம், நகர்வளம் முதலிய கூறப் புகுந்தாலும் தம்முடைய நூலின்