பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தேசிய இலக்கியம் மில்லை மாதோ’ என்று கூறின கவிஞன், சில நூறு கவிகளுக்கு அப்பாற் சென்றதும் இதனை மறந்துவிடுகிறான். இராகவன் காடு செல்லத் துணிந்தவுடன் அந்தணர் கட்குப் பசுக்களைத் தானம் செய்கிறான். ஆனால், தானம் பெறுகின்ற அந்தணர்களின் ஆசை அடங்கவில்லையாம். வாங்கியவர்களே மீட்டும் மீட்டும் வந்து வாங்குகிறார்களாம். அது தெரிந்த இராகவன் அவர்களைக் கடிந்து கொள்ளாமல் அவர்கள் பேராசையைக் கண்டு புன்சிரிப்புக் கொண்டானாம். இக் கருத்துடன், பரித்த செல்வம் ஒழியப் படருநாள் - அருத்தி வேதியர்க்கு ஆன்குலம் ஈந்து அவர் கருத்தின் ஆசைக் களவின்மை கண்டு இறை சிரித்த செய்கை........." என்று பாடுகிறான். இதற்கும், முன்னர்க் கூறிய வருண னைக்கும் என்ன தொடர்பு? கம்பனைத்தான் கேட்க வேண் டும். இத்தகைய முரண்பாடுகள் ஒன்றும் இன்றிச் செல் கின்றன சேக்கிழாருடைய வருணனைகளும் கற்பனைகளும். ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தில் பெரும் பகுதி சுந்தரர் வரலாறே பேசப்பெறுகிறது. சுந்தரர் சங்கிலியாரை மணந்ததும், இறைவனைத் தூது அனுப்பியதும் ஆகிய செய்திகள் வரும் இடம் இச் சரிதமே ஆகும். எனவே, இப் புராணத் தொடக்கத்தில் வருணனை வேறுவிதமாக உள்ளது. சுந்தரர் காதல் கூறும் பகுதியாகலின் ஊர்பற்றிக் கூறும் பொழுது, - "கஞ்சு சூழ்வன கயணியர் களினமெல் அடிச்செம் பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு" - (பெப்பு.-ஏயர்கோன், 2) என்று.பேசப்படுவது காண்க. ---- (நஞ்சு நிறைந்த கண்களையுடைய பெண்களின் காலில் பூசிய செம்பஞ்சுக் குழம்பு ஊடற்காலத்து அவர்களை வணங்கும் ஆடவர்களின் முடியில் படிந்துள்ளது.)