பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 108 "பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலங் காப்பான் தன்னெடும் குடைக்கீழ்த் தத்தம் கெறிகளில் சரித்துவாழும் மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங் காலை இன்னுயிர் இன்றி வாழும் பாக்கையை ஒக்கும் என்பார்" (பெ.பு.-மூர்த்தி நாயனார், 28, 29) (வருமானம், குடிகள் ஆகியவை இருப்பினும் படை யுடன் கூடிய மன்னன் காவல் இல்லையானால் இவ்வுலகம் வாழமுடியாது தன் குடைக்கீழ் மக்களைக் காக்கும் மன்னனை இல்லாத உலகம் உயிரில்லாத உடம்பைப் போன்ற தாகும் ) இவ்விரண்டு பாடல்களாலும், மன்னர்களைப் பற்றிச் சேக்கிழார் கொண்டிருந்த கருத்தை ஒருவாறு அறிய முடிகிறது. சோழப் பேரரசின் பொற்காலம் என்று அவர் வாழ்ந்த காலத்தைக் கூறலாம். இராசராசன் காலத்திலிருந்து அவருடைய காலத்தவனான அநபாயன் எனப்படும் இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரையில் சோடையான மன்னர் ஒருவர்கூட இல்லை. இராசராசன் முதல் அனைவரும் சிறந்த சிவபக்தர்கள். திருக்கோயில்கள் கட்டுவதிலும், அவற்றுக்கு இறையிலியாக நிலங்கள் விடுவதிலும் ஒருவருக் கொருவர் போட்டி இட்டனர். அரசர்கள்தாம் இவ்வாறு என்றால், அவர்களுடைய தேவிமாரும் கோயில்களுக்குத் திருவாபரணம் செய்வதிலும் நிலம் விடுவதிலும் மேலும் மேலும் போட்டி இட்டனர். சேக்கிழார் காலம் வரையில் இருந்த இடைக்காலச் சோழர் பரம்பரைதான் இப்படி என்றால், அவரால் அறியப்பெற்ற பல்லவர்களும் இந்நிலையிலேயே இருந்தனர். திருநாவுக் கரசர் காலத்தவனான மகேந்திரவர்மன் ஒப்பற்ற சிவ பக்தனாக மாறிவிட்டான். பல சிவன் கோயில்கள் கட்டினான், 'பல்லவர்க்குத்திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற பெருடிை