பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108. தேசிய இலக்கியம் திருவாரூரில் இறைவழிபாடு செய்யும் காலத்தில் இறைவனுக் குரிய பூவை எடுத்து மோந்ததற்காக மனைவியாகிய பட்டத் தரசியின் கையை வெட்டினவர். திருத்தொண்டத்தொகை அருளிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவர். கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்பது திருத்தொண்டத்தொகை. இங்குக் காக்கின்ற. என நிகழ் காலத்தில் ஆசிரியர் பேசுகிறாராகலின் கழற்சிங்கன் என்ற பெயருடைய இப்பல்லவ மன்னர் சுந்தரர் காலத்தவர் என்று தெரிகிறது. உலகெல்லாம் காக்கின்ற பெருiaான் என்று சுந்தரர் பாடியுங்கூடச் சேக்கிழார் இவரைப்பற்றிச் சாதாரணமாகவே பாடுகிறார். இவருடைய பக்திச் சிறப்பை நன்கு எடுத்துக் காட்டுகிறார் சேக்கிழார் என்பதில் ஐயமொன்றும் இல்லை. பின்னர் ஏன் இவரைப்பற்றி வேறு குறிப்பொன்றும் தரவில்லை? இவ்வாறு சேக்கிழார் பாடியதற்கு இரண்டு காரணங்கள் கூற இடமுண்டு. ஒன்று. மன்னர்களின் பக்திச் சிறப்பைப் பாட வந்தாரே அல்லாமல் அவர்களுடைய வெற்றிச் சிறப்பைப் பற்றிச் சேக்கிழார் கவலை கொள்ளவில்லை என்பது. நின்ற சீர் நெடுமாறன் என்றும், கூன் பாண்டியன் என்றும் சிறப்பிக்கப் பெறும் பாண்டிய மன்னவனே திருஞான சம்பந்தரால் ஆட்கொள்ளப்பெற்றவன். மங்கையர்க்கரசியாரின் மண்ாளனாகிய இவன், மிகச் சிறந்த தமிழ் மன்னர்களுள் ஒருவன். இறையனார் களவியல் உரையில் மேற்கோளாகக் காட்டப்பெறும் பாண்டிக் கோவைப் பாடல்கள் இவனைப் பாராட்டி இயற்றப் பெற்றவையே எனத் தெரிய வருகிறது. அப்பாடல்களின் மூலமும் சரித்திரத்தின் மூலமும் இவனுடைய வெற்றிச் சிறப்புகளை அறிய முடிகிறது. நெல்வேலி வென்ற நெடுமாறன்’ என்று இவன் சிறப்பிக்கப் பெறுவதோடு, பாழில், உழிஞம், வல்லம், பூலந்தை ஆற்றுக்குடி, கோட்டாறு, கடிையல் நறையாறு முதலிய பல இடங்களில் போர்,